பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

abstract thinking

44

acantholysis


குறைவான; வேறு எண்ணமுடைய; (3) பொருந்தாப் பல் அமைப்பு; (4) மொத்தக் கருத்திலிருந்து சிறு பகுதியை மட்டும் பிரித்துக் கருதுதல்.

abstract thinking : இல் பொருள் சிந்தனை; வெறும் எண்ணம்.

abulia : உளத்திட்பக் குறை; கோழைமைத் தன்மை; மன உறுதிப் பாட்டுக் குறை: தானாக முடிவுகள் எடுப்பதற்கு அல்லது செயல்களைச் செய்வதற்குரிய மன உறுதி இல்லாமை.

abusive : கெடுபயன்.

abuse: தவறாகப் பயன்படுத்துதல்; மிகுதியாகப் பயன்படுத்துதல்; கெட்ட பழக்கம்; உடலுக்குத் தீங்கு செய்கின்ற பழக்கம்; கேடு விளைவிக்கின்ற பழக்கம்: (எடு) போதை மருந்துப்பழக்கம்.

abutment. : ஒட்டிக்கிடக்கை; முட்டிடம்: பற்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு இருத்தல்.

acacia : அகேசியா; வேலமரம்: பிசின் தரும் ஒருவகை மரம்.

acalphaindica: குப்பைமேனி.

acalulia : கணிப்புத் திறன் குறைபாடு: மிக எளிமையான கணக்குகளைக்கூடச் செய்ய இயலாதிருத்தல்,

acantha: கூர்நுனி தண்டு வட எலும்பு: நுனி கூர்மையாக உள்ள தண்டுவட எலும்பு.

acanthesthesia : முள்குத்தல் உணர்வு: தோலின் மேற்பரப்பில் முள்குத்துவது போன்று அல்லது ஊசியால் குத்துவது போன்ற உணர்வு உண்டாதல்.

acanthion : ஊசிமுனை எலும்பு; கூர்நுனி எலும்பு: மூக்கு எலும்பு முன் துணி.

acanthocyte : முட்செல்;முட் சிவப்பணு: வட்டமிான சிவப்பணு நீளவடிவில் உருமாற்றம் அடைதல். சிவப்பணு இயல்பற்ற நிலையில், அதன் மேல் முற்கள் முடியுள்ள தோற்றத்தில் இருத்தல்.

acanthocytosis : முட்சிவப்பணு மிகைக் குருதி: இரத்தத்தில் முட்சிவப்பணுக்கள் மிகுதியாகக் காணப்படும் நிலை. பீட்டாலைப்போ புரோட்டீன் இரத்தத்தில் மிகுதியாகும் பொழுது இந்த நிலைமை ஏற்படும்.

acanthokeratodermia : மேல் தோல் திசுத் தடித்தல்: தோலின் கடினமான திசுக்கள் குறிப்பாக, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் திசுக்கள் தடித்துப் போதல்.

acantholysis: மேல் தோல் இணைப்புத் திசு அழிவு: தோல் நோயில் ஒருவகை. இதில், தோலின் மேற்புறமுள்ள இணைப்புத் திசுக்கள் அழி கின்ற நிலைமை காணப்படும்.