பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

eyes

450

Eumydrin


eyes : கண்கள் : கண் பகுதி, கண்ணிருக்கும் முகத்தின் பகுதி.

eyeball : கண் விழி.

eye-bath : கண் கழுவு நீர்க்கலம்.

eyebrow : புருவம்.

eye-lash :கண் இமை மயிர்வரிசை.

eyesight : காட்சித்திறம்; பார்வைத் திறன் : பார்வையாற்றல்.

eye-string : கண்ணிமை நரம்பு : கண்ணிமைக் கதுப்பினை இயக்க உதவும் தசைப்பற்று.

eyeteeth : கோரப்பற்கள் : மேல் கோரப்பல் கணணுசகுக கீழே மேல் தாடையிலுள்ள கூர்மையான பல்.

eye-tooth : கோரப்பல் : கணணுக்குக் கீழே மேல் தாடையில் அமைந்துள்ள கூர்மையான பல்.

eyewash : கண்கழுவு மருந்து.

eyewater : கண்ணீர் :கண்ணருகே சுரக்கும் நீர்மம்.

Eumydrin : எய்மிட்ரின் : ஆட்ரோப்பின் மெத்தோநைட்ரேட்டின் வணிகப் பெயர். சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதிக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.