பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

family planning

454

farsightedness


பகிர்ந்து கொள்ளும் ஒரு சமுதாயம்.

family planning : குடும்ப நலத் திட்டம் : தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் குழந்தைப் பிறப்புக் கிடையிலான இடைவெளியை அதிகமாக்கக் கருத்தடைச் சாதனங்களை அல்லது மருந்துகளைப் பயன்படுத்துதல்

fan : சுழலி.

Fanconi's anaemia : ஃபேங்கோனி இரத்தச் சோகை : ஒர் அரிதான பிறவி நோய் குழந்தைப் பருவத்தில் உண்டாகும் புதுத் தசை வளர்ச்சியடையாமலிருத்தல் இதன் பண்பு. இதனால், இயல்பு மீறிய எலும்பு வளர்ச்சி, வளர்ச்சி முரண்பாடுகள் உண்டாகின்றன. சுவிஸ் குழந்தை மருத்துவ அறிஞர் கைடு ஃபேங்கோனி இந்நோயை விவரித்தவர்.

Fanconi syndrome : சிறுநீரகக் குழாய்க் கோளாறு : உடலின் மையத்தை நோக்கி அமைந்துள்ள சிறுநீரகக் சிறு குழாய்கள் சரியாகச் செயற்படாம விருத்தல், இதனால் தாகம், எலும்புக் கோளாறுகள், தசை வலுவிழத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

fang : கூரிய பல் : 1. கூர்மையான முனையுடைய பல். 2. ஒரு பல்லின் வேர்.

fantasy, phanatsy : பகற்கனவு; மனக்கண் தோற்றம் : ஒருவர் நிறைவேறுவதாக அறிந்தோ அறியாமலோ கருதும் கனவு நிலை.

Farber's syndrome : ஃபார்பர் நோய் : பரவிய கொழுப்பு திசுக்கட்டி அழற்சி. அமெரிக்க எலும்பியலறிஞர் எஸ்ஃபார்பர் பெயரால் அழைக்கப்படுகிறது.

farinaceous : கூல மாவு; மாவுப் பொருள் : தானிய மாவுப் பொரு ளாலான பொருள்.

farmer's lung : உழவர் நுரையீரல் : சிலவகை நுண்துகளில் ஏற்படும் ஒவ்வாமையினால் உண்டாகும் நுரையீரல் கண்ணறை நோய். இது ஒரு தொழில் துறை நோய்.

farpoint : தூரப்புள்ளி : பொருள்களைக் கண்கள் தெளிவாகப் பார்க்கக்கூடிய மிக அதிகதுரப் புள்ளி.

Farr's law : ஃபார் விதி : கொள்ளை நோய்கள் பரவுவதற்கும் குறைவதற்குமான ஒரு முறையான தோரணி பற்றிய விதி. பிரிட்டிஷ் புள்ளியலறிஞர் டபிள்யூ ஃபார் என்பார் இந்த விதியை வகுத்தார்.

farsightedness : தூரப்பார்வை : ஒளிக்கதிர்க் கோட்டக் கோளாறு. இதில், இணைக்கதிர்கள், கண் விரியின் பின்புறத்திரைக்கு வெளியே குவிகிறது. இதனால், இசைவிணக்கம் முழுமையாகக்