பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Feldene

457

Fentanyl


Feldene : ஃபெல்டென் : பிரோக் சிக்கம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

felon : கொடுரச் சீழ்க்கட்டி : மிகக் கொடுரமாக வலி உண்டாக்கக் கூடிய புரைத்துச் சீக்கொள்கிற கட்டி. இது விரலில் மைய எலும்பில் உண்டாகும். இதனை நகச்சுற்று என்றும் கூறுவர்.

Felty syndrome : ஈரல் விரிவு : ஈரற்குலை, மண்ணிரல், நிண நீர்க்கணுக்கள் விரிவடைதல். இது கீல்வாத முட்டு வலியினால் உண்டாகிறது.

felypressin : ஃபெலிப்பிரசின் : குருதி நாள இறுக்க மருந்து நரம்புச் சுருக்க மருந்து.

female : பெண் : இருபாலரில் பெண்மைப் பண்புகளுடையவர். கரு முட்டைகளை உற்பத்தி செய்து குழந்தைகளைப் பெறுபவர்.

Femergin : ஃபெமெர்ஜின் : எர்கோட்டாமின் டார்ட்ரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

feminality : பென்ணியல்பு.

femineity : பெண்மை; வெட்டி; ஆண்மையற்ற.

feminine : பெண்ணியல்பு; பெண்பால்.'

feminism : பெண்மைப் பண்பு; பெண்ணியம் : ஒர் ஆண், பெண் பாலருக்குரிய பாலியல் பண்புகளைத் துணையாகக் கொண்டிருத்தல்.

feminization : பெண்மையாக்கம்; பெண்ணாக்கம் : ஆணிடம் பெண்மைப் பண்பியல்புகள் துணைமையாக வளர்ந்திருத்தல்.

femoral : துடைசார்ந்த : துடையெலும்புத் தொடர்புடைய.

femoral artery : தொடைக் குருதிக் குழாய் : தொடையின் முதன்மை வாய்ந்த குருதிக் குழாய்.

femur : தொடையெலும்பு.

fenbufen : ஃபென்புஃபென் : வீக்கத்தைத் தணிக்கும் மருந்து.

fenestra : காதுத் துளை; திறந்த வழி : காதிலுள்ள பலகணியை யொத்த சிறு துளை.

fenestration : காதுத் துளையாக்கம்; துளைப்பு : செவிட்டுத் தன்மையைக் குறைப்பதற்காக உட்காதில் அறுவை மருத்துவம் மூலம் ஒர் துளை உண்டாக்குதல்.

fenfluramine hydrochloride : ஃபென்ஃபுளுராமின் ஹைட்ரோ குளோரைடு : பசியைக் கட்டுப் படுத்தும் ஒருவகை மருந்து.

Fentanyl : ஃபென்டானில் : குறுகிய நேரம் செயற்படக்கூடிய நோவுணர்ச்சியகற்றும் மயக்க மருந்து அபினிச்சத்து போன்றது. ஆனால் அதைவிட அதிக ஆற்றல் வாய்ந்தது. குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் மயக்க மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.