பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acanthoma

45

acarus scabiei


acanthoma : மேல்தோல் கட்டி: மேல்தோல் அணுக்களில் வளர்கின்ற ஒரு தீங்கிலாக் கட்டி,

acanthosis : மேல்தோல் திசு மிகைப்பு; மேல்தோல் திசுத் தடிப்பு: தோலின் மேல் அடுக்கைத் தாக்கும் அணு அதிகரிப்பு நோய்.

acapnia : கரிவளியின்மை; கரியமிலவாயுக் குறை இரத்தம்; கரிமவளிக் குறைக்குருதி; கரியமில வாயு இன்மை: இரத்தத்தில் கரியமில வாயு இல்லாத நிலைமை.

acardiac : இதயப்பை இல்லா.

acaricide : சருமப்பூச்சிக் கொல்லி; தோல் பூச்சிக் கொல்லி.

acatalasia : செரிபொருள் வினையின்மை: செரிமானப் பொருள் வினையூக்கம் இல்லாதிருப்பதாக மரபணுவியல் முறைப்படித் தீர்மானிக்கப் பட்ட ஒரு குறைபாடு. இது வாய்வழியான சீழ்த்தொற்றுக்கு முன்பே எளிதில் ஆளாகும் நிலையை ஊட்டுகிறது.

acarbia : பைகார்பனேட் குறைக்குருதி: இரத்தத்தில் பைகார்பனேட் அளவு குறைந்த நிலை.

acardia : இதயமின்மை; இதயம் இல்லா உடல்: பிறவியிலேயே இதயம் இல்லாதிருத்தல்.

acardiac : நெஞ்சுப்பை அற்ற.

acariasis : தோல் பேன்நோய்: பூச்சி வகைக் கிருமியால் உண்டாகும் ஒருவகைத் தோல் நோய். இது கிருமிகள் தோலைச் சுரண்டி, அங்கு முட்டை யிட்டு, குஞ்சு பொரித்து உயிர் வாழும் குணமுடையது.

acaricide : தோல் பூச்சிக் கொல்லி: தோல் பூச்சிகளைக் கொல்லும் பொருள் அல்லது மருந்து.

acaridae : அகார்டியா; தோல் பூச்சி: தோலை அரிக்கும் ஒரு வகைப் பூச்சிக் குடும்பம்.

acarina : அகாரினா: உடல்புற ஒட்டுண்ணியைச் சார்ந்த கிருமி. (எடு) உண்ணி, இது நோய்ப் பரப்பியாக செயல்படும் தன்மையுள்ளது.

acarodermatitis : தோல் பூச்சிக்கடி அழற்சி: பூச்சிக் கடியால் தோலில் ஏற்படும் அழற்சி.

acarology: பேனுண்ணியல்.

acarophobia : பூச்சி பயம்: பூச்சிகளைக் கண்டால் ஏற்படும் பய உணர்வு.

acarus : சருமப் பேன்; தோல் பேன்: உண்ணிகளின் இனப்பிரிவு.

acarus scabiei : சொறிப் பேன்.