பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fibroblast

fibrositis


fibroblast : எலும்புப் புரத உயிரணு : இணைப்புத் திசுக்களின் ஒரு முக்கிய அங்கமான எலும்புப் புரதம் உற்பத்தி செய்யும் ஒர் உயிரணு,

fibroblastoma : எலும்புப் புரதக் கட்டி : எலும்புப் புரத உயிரணு விலிருந்து உண்டாகும் கட்டி.

fibrocartilage : இழை நார்க் குருத்தெலும்பு; நார்க்குருத்து : இழை நார்த் திசுக்கள் அடங்கிய குருத்தெலும்பு.

fibrocaseous : மென் புரதம்: நார்ப்பாலாடைக் கூழ் : பாலாடை கட்டி போன்ற மென்மையான பொருள். இது எலும்புப் புரத உயிரணுவினாலானது. இதனுள் இழை நார்த்திசு ஊடுருவிச் செல்லுகிறது.

fibrochondritis : இழை நார்க் குருத்தெலும்பு வீக்கம்.

fibrochondroma : இழைமத் திசு-குருத்தெலும்புக் கட்டி : இழைமத் திசு மற்றும் குருத்தெலும்பில் உண்டாகும் கட்டி.

fibrocyst : இழை நார்க்கட்டி : ஒருவகை நரம்புக் கட்டி.

fibrocystic : இழைமத் திசு இடைவெளி : ஒரு சுரப்பியில் இழைமத் திசுவும், திசுப்பை இடைவெளியும் உண்டாதல்.

fibrodysplasia : இழைமத் திசு மிகை வளர்ச்சி : இழைமத் திசு அளவுக்கு மீறி வளர்ச்சியடைதல்.

fibroid : இழை நார்த் தசைக்கட்டி; கருப்பை திசுக்கட்டி; நார்க்கட்டி : இழைநார் அமைப்புடைய கருப்பைப் பரு அல்லது கட்டி.

fibroma : நரம்புச் சிலந்தி; தசை நார்க்கட்டி; நார்ப்புத்து; நரம்புக் கட்டி : நரம்புத் திசுவில் ஏற்படும் தீவிரமிலா கட்டி.

fibromyalgia : மூட்டுத்தசைவலி : மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை களிலும் மெல்லிய திசுக்களிலும் ஏற்படும் கடுமையான வலி.

fibroplasia : இழைமத்திசு உற்பத்தி : காயம் குணமடையும் போது ஏற்படுவது போல் இழைமத் திசு உற்பத்தியாதல்.

fibro sarcoma : நரம்புக்கழலை; நார்ச்சதைப் புற்று : எலும்புப் புரத உயிரணுக்களிலிருந்து உண்டாகும் ஒருவகை புற்று நோய்க் கழலை.

fibroserous : இழைம மூலப் பொருளார்ந்த : இதய மேலுறையில் உள்ளது போன்று இழைம மற்றும் ஊனிர்ச்சவ்வு மூலப் பொருள்கள் அடங்கியிருத்தல்.

fibrosis : இழைம அழற்சி; நார் மிகை : இழைம இணைப்புத் திசு நுரையீரல் பெருக்கமடைந் திருத்தல். இதில் நுரையீரல் திசுவுக்குப் பதிலாக இழைமத்திசு அமைந்திருக்கும். இது வீக்கம் காரணமாக உண்டாகும்.

fibrositis : தசைநார் வீக்கம்; நார் திசு அழற்சி; நார் அழற்சி; இழைம அழற்சி : கீழ் வாதம் சார்பான தசை நார் வீக்கம். இது உறுப்புகளிலும், உடலிலும் உள்ள மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. பொது