பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fibrous

field of vision


வாகத் தசை விறைப்புடன் தொடர்புடையது.

fibrous : இழைம.

fibrous tissue : நார்ப்பொருள் திசு; நார்த் திசு : உடலின் தசைகளை ஒன்று சேர்த்து, எலும்புகளுடன் தசைகளைத்திடும் வெள்ளை நிற நாரியற்பொருள். இது தோலின் அடிப்படலமாக அமைந்துள்ளது. தசையில் காயம் பட்டால், சேதமுற்ற தசையை சீர்படுத்தி காயத்தை ஆற்றுவதும் காயம்பட்ட இடத்தில் வடு ஏற்படுவதற்கும் இதுவே காரணம். மஞ்சள் நாற்பொருள் திசுவும் இது போன்றதே. ஆனால், இது மிகுந்த நெகிழ் திறனுடையது இரத்த நாளங்களிலுள்ளது.

fibula : கால்சிம்பு எலும்பு; சரவெலும்பு : உடலிலுள்ள மிக நீளமான, மிக மெல்லிய எலும்புகளில் ஒன்று. காலின் வெளிப் புறத்திலுள்ள சிம்பு எலும்பு.

fifth disease : இந்தாம் நோய் : தோல் தடிப்பு நோய், பள்ளிக் குழந்தைகளுக்கும், வயது வந்த இளம்வயதினருக்கும் கொள்ளை நோயாகப் பரவும் நோய். இதனால் தோல் வெடிப்பு, சில சமயம் மூட்டு வீக்கம் ஏற்படும்.

filament: நுண்ணிழை.

filaria : வீக்க நோய், யானைக் கால் வீக்க நோய்.

filariasis : யானைக் கால் நோய் : உடலின் திசுக்களில் இழை ஒட்டுண்ணியால் அல்லது நுண்ணிழை ஒட்டுண்ணியால் உண்டாகும் ஒரு நோய். இதில் நோய்க்கிருமியில்லாமல் நுண்னிழை ஒட்டுண்ணி இருந்து வரும்; அல்லது கடுமையான நிணநீர் நாள வீக்கம் ஏற்படும். இதனால் ஒழுங்கற்ற கீற்று போன்ற மென்மையான நிணநீர் நாள அழற்சி உருவாகும்; விரிவடைந்த மென்மையான நிணநீர் நாளக் கரணைகள் உண்டாகும்; அல்லது கடுமையான நிணநீர் நாளத்தடை எற்படும். இதன் காரணமாக உறுப்புகளில் நீரண்டம், யானைக் கால் வீக்கம் உண்டாகும்.

field of vision : நிலைக்குத்துப் பார்வை; பார்வைப் பரப்பு; பார்வைத் தளம்; பார்வைப் புலம்; காண்பரப்பு : நிலைக்குத்துப்