பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

filaria

463

first aid


பார்வையினால் பொருள்களைப் பார்க்கும் பகுதி.

filaria : இழை ஒட்டுண்ணி : வெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலம் சார்ந்த பகுதிகளிலும் காணப்படும் நோய் உண்டாக்கும் இழை போன்ற ஒட்டுண்ணிப் புழுக்களின்வகை.

filiform : இழைத்துழை; இழை நுழைப்பு : தடைபட்டிருக்கும் இரத்தத்தின் உறைவை உண்டாக்க குருதி நாள அழற்சியில் கம்பி இழை முதலியவற்றைச் செலுத்துதல்.

fixmas : ஆண் பெரணி : மூளையின் இழைக்கச்சை போன்ற பகுதியை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆண் பெரணி.

fillet : நார்க்கற்றை.

filter : வடி; வடிகட்டி.

filterable : வடிதங்கு.

filterpassing : வடிசெல்.

filtrate : வடிகட்டிய நீர்மம்; வடியம்; வடிசல் : வடிகட்டி மூலம் வடிகட்டப்பட்ட பொருள்.

filtration : வடிகட்டுதல்; வடித்தல்; வடியம் : ஒரு வடிகட்டி வழி யாக ஈர்ப்பு அழுத்தம் அல்லது வெற்றிடம் மூலமாக ஒரு பொருளை வடிகட்டுதல்.

filum : நார்வடிப்பொருள்; நூலுரு; இழை : நார்வடி அல்லது இழை போன்ற ஒரு பொருள்.

fimbria : விளிம்பு மயிர் : விளிம் பில் உள்ள மயிரிழை.

fimding : காண் முடிவு.

fine needle aspiration : நுண்ணூசி உறிஞ்சல் : உயிரணுவியல் நோய் நாடலுக்காகப் பொருள்களை உறிஞ்சி இழுக்கும் முறை.

fine tremor : இலேசாக நடுக்கம் : கேடயச்சுரப்பி நச்சு காரணமாக நோயாளியின் நீட்டிய கைகள் அல்லது நாக்கு லேசாக நடுங்குதல்.

finger : விரல் : கட்டைவிரல் அல்லது மற்ற நான்கு விரல்களில் ஒன்று.

finger-print : கைரேகை : விரல் அடையாளம், கைநாட்டுக்குறி.

finger-shall : விரலுரை.

fission : அணுப்பிளப்பு; கூறு படல் : புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல்; இனப்பெருக்கத்திற்காக உயிரணு வெடித்துப் பிளத்தல்.

first aid : முதலுதவி : காயமடைந்த அல்லது நோயுள்ள ஆளுக்கு மருத்துவப் பயிற்சி பெற்றவர் மூலம் சிகிச்சைக்கு முன்னர் உடனடியாக மருத்துவ உதவி செய்தல்.