பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flatulence

466

flicker


fatulence : வயிற்றுப் பொருமல்; வயிற்று உப்புசம்; வாயுப் பொருமல் :உணவுக் குழாயில் உண்டாகும் வாயுவினால் வயிற்றில் ஏற்படும் பொருமல்.

flatus : வாய்வு; குடற் காற்று : வயிற்றில் அல்லது குடல்களில் உண்டாகும் வாயு.

flat worm : தட்டைப்புழு; குடற்புழு : ஃபெலம் ஃபிளாட்டி ஹெல்மிந்தெஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு புழு.

flavism : மஞ்சள் நிறச் சாயல் : மஞ்சள் வண்ணச் சாயல் உடைய ஒரு நிலை.

flavivirus : மஞ்சள் காய்ச்சல் கிருமி : மஞ்சள் காய்ச்சல், மூட்டுவலிக்காய்ச்சல் (டெங்கு), சிலவகை மூளை அழற்சி உண்டாக்கும் 'B' ஆர்போ குழுமக் கிருமிகள்.

flavouring : நறுமண மூட்டல்.

Flaxedil : ஃபிளாக்செடில் : காலாமைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

flea : தெள்ளுப்பூச்சி (உண்ணி) : இரத்தத்தை உறிஞ்சும் சிறகற்ற ஒருவகைச் சிறிய உயிரினம்.

fleam : அறுவைக் கூர்ங் கத்தி.

fleeting : பாயும்.

flesh : தசை.

fleshy : கொழுத்த; தசைப் பற்றுடைய.

flesh-eating bacteria : தசை திண்ணிக் கிருமி : 'மனிதனைத் தின்னும் நோய்' எனப்படும் நோயை (Necrotising faciitus) உண்டாக்கும் நோய்க்கிருமி. இந்த நோயின் போது, இக்கிருமி தசைத் திகக்களை வேகமாக அழித்துவிடுகிறது. இதனால், சிலசமயம் மரணம் விளைகிறது. இந்நோய் கண்டவர்களுக்குக் கடுங்காய்ச்சலும், கடும் வலியும், வாந்தியும் ஏற்படுகிறது. சிறுநீரகமும் நுரையீரலும் சரிவரச் செயற்படுவதில்லை. கடுமையான நேர்வுகளில் நோயாளிகள், குருதி நச்சு, பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மரண மடைகிறார்கள்.

flexibility : நெகிழ்திறன்; வளைவியம் : உடையாமல் வளையக் கூடிய தன்மை, தகவமைவுத் திறன்.

flexible : வளைய.

flexion : உறுப்பு வளைவு; மடித்தல்; முடக்கம் : நீண்ட எலும்புகள் வளைந்திருப்பதால் உண்டாகும் உறுப்பு வளைவு.

flexor : வசிநரம்பு (மடக்கி) : மூட்டு மடங்கச் செய்யும் தசை.

flexure : கோணல்; மடக்கம்; மடிப்பு : வளைந்து நெளிந்துள்ள நிலை.

flicker : சுடர் நடுக்கம் : ஒளி இமைத்திமைத்து மாறி மாறி இடைவெளிகளில் தோன்றுவது போன்ற பார்வை உணர்வு. ஒளித்துண்டல் கால இடை வெளியில் தடைபடுவதால் இது உண்டாகிறது.