பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gallbladder

483

galvanometer


இதயஞ்சார்ந்த நோயில் கடு முயற்சி அல்லது உணர்ச்சி காரணமாகத் துண்டப்படும் மூச்சு நிறுத்தம்.

gallbladder : பித்தப்பை; பித்த நீர்ப்பை : நுரையீரலின் அடிப்பரப்பில் உள்ள பேரிக்காய் வடிவமுள்ள பை. இதில் பித்த நீர் சேர்த்து வைக்கப்படுகிறது.

பித்த நீர்ப்பை

gal-duct : பித்த நீர் வடிகுழாய்.

gallipot : ஜாடி; குழம்புப் பானை : தைலம் வைக்கப் பயன்படும் பளப்பளப்பான மட்பாண்டம்.

gallery : அடுக்கு மேடை.

gallop : குருதியோட்டம்; இரத்தப் பாய்வு.

gallop-rhythm : பாயமைவு.

gallstones : பித்தப்பைக் கல்; பித்தக்கல் : பித்தப்பையில் உண் டாகும் கல் போன்ற கடும் பொருள்.

galls : மரக்கரணைகள்; மாசைக்காய் : கருவாலி போன்ற சில மரங்களின் கரணைகளிலிருந்த சுரக்கும் பால். இதிலிருந்து தானிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.

Galvanic electric stimulation : மின்னோட்ட மின் தூண்டல் : தசை இசிவு, இதயத்தசை வலி ஆகியவற்றைக் குணப்படுத்தவதற்கான மிகை அழுத்த மின் துண்டல்.

galvanism : கால்வானியம்.

galvano cauterization : மின்னோட்டத் தீய்ப்பு : திசுக்களை அழிப்பதற்கு மின்னோட்டம் மூலம் சூடாக்கப்பட்ட ஒரு கம்பியைப் பயன்படுத்துதல்.

galvanometer : மின்னோட்ட மானி; கால்வானிய மானி : மின் னோட்டத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி.