பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Gambel's syndrome

484

ganglionciliary


Gambel's syndrome : கேம்பெல் நோய் : பச்சிளங்குழந்தைகளுக்குக் குடும்ப மரபாக வரும் வயிற்றுப் போக்கு இந்த வயிற்றுப்போக்கில் குளோரைடு மிகுதியாக இருக்கும். அமெரிக்கக் குழந்தை மருத்துவ வல்லுநர் ஜே.கேம்பெல் பெயரால் அழைக்கப்படுகிறது.

gamete : பாலணு; பாலின உயிரணு; புணரி : இனப்பெருக்கத்தில் இருபால்களின் சார்பாகவும் இணைந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச் சார்பான ஊன்மத் துகள்.

gamete intrafallopian transfer (GIFT) : பாலணு வெளியேற்ற மாற்றம் : மலட்டுத்தன்மையைக் குணப்படுத்துவதற்காக மனிதக்கருவூட்டத் துக்கான ஒர் உத்தி. இதில், ஆண் பெண் பாலணுக்கள் கரு வெளியேறும் குழாயின் விளிம்பு முனைகளுக்கு லேப்ராஸ்கோப் வழியாக உட் செலுத்துதல்.

gametocide : பாலணு ஒழிப்புப் பொருள் : பாலணுக்களை அல்லது பாலின உயிரணுக்களை அழிக்கிற ஒரு பொருள். முக்கியமாக மலேரிய ஒட்டுண்ணி.

gametogony : பாலணு உயிரணு உருவாக்கம் : கொசுவைத் தாக்கும் மலேரியா ஒட்டுண்ணியின் ஆயுள் சுழற்சியில் ஆண் பெண் பாலின உயிரணுக்கள் உருவாதல்.

gammabenzene hexachloride : காமபென்சீன்ஹெக்சாகுளோரைடு : தலைப்பேனை ஒழிப்பதற்குச் சவர்க்காரக் குழப்பாக (ஷாம்பூ) பயன்படுத்தப்படும் பொருள்.

gamogenesis : பாலிணைவு இனப்பெருக்கம் : இருபால்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்தல்.

gamma rays : சிற்றலை ஒளிக்கதிர்; காமாக் கதிர்கள் : மிகக் குறுகிய ஒளிக்கதிரலையுள்ள ஊடுருவு கதிர். கதிரியக்கத் தனிமங்களின் அணுக்கரு மையம் சிதைவுறுவதால் இது உண்டாகிறது.

gangliate : நரம்பு முடிப்புகள் உள்ள.

gangliated : நரம்பு மைய.

ganglion : நரம்பு மண்டல மையம்; நரம்பு முடிச்சு; நரம்புக் கணு; நரம்பு முண்டு : மங்கிய சாம்பல் நிறமுடைய மாப்பொருள் நிரம்பிய நரம்பு மண்டல மையம்.

gangsion-cell/ganglion corpus culelganglion globule : நரம்பு மையக் கருவணு.

ganglion, cervical : கழுத்து முகை.

ganglionciliary : பிசிர்முகை.