பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ganglion-lumbar

485

garden screws


ganglion-lumbar : இடை முகை.

ganglion, sympathetic : உடனிசை முகை; உடனிசைத்தொகை.

ganglionectomy : நரம்பு மண்டல மைய அறுவை மருத்துவம்; நரம்பு முகை நீக்கம்.

ganglionic : நரம்பு மையம் சார்ந்த; நரம்புக் கணு சார்ந்த.

gangrene : தசையழுகல் நோய்; அழிவுறல்; அழுகம் : தசையழுக லுடன் கூடிய உடலின் உட் கூறு அல்லது திசுக்கள் அழிந்து போதல், இது பெரும்பாலும் இரத்தவோட்டக் குறைபாட்டினால் உண்டாகிறது. சிலசமயம், நேரடிக் காயம் அல்லது நோய்த் தொற்று காரணமாகவும் ஏற்படலாம்

gangrene, diabetic : நீரிழி வழுகம்.

gangrene, dry : வறலழுகம்.

gangrene,gas : வளிவழுகம்.

gangrene, moisture : கசிவழுகம்.

gangrene, septic : சீவழுகம்.

gangrenous stomatitis : தசையழுகல் அழற்சி; அழுகிய வாயற்சி : புற்றுப்புண்.

Ganser syndrome : உளறல் நோய் : ஒருவர் கேள்விகளுக்கு தவறான பதில்களைக் கூறி, தான் சரியான பதிலைக் கூறி விட்டதாக எண்ணிக் கொள்ளும் மனக்கோளாறு நோய். எடுத்துக்காட்டாக, இந் நோய் கண்டவர் ஒரு குதிரைக்கு ஆறுகால்கள் என்று கூறுவார்.

Gantrisin : கேண்ட்ரிசின் : சல்ஃபாஃபுரோசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

gantry : நிலைதாங்கி : 1. மிடா வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரத்தாலான நிலை தாங்கி, இதில் ஊடுகதிர் உள் தளப்படம் எடுப்பதற்காக நோயாளியைப் படுக்கவைத்து எடுத்துச் செல்வர். 2. ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட முடுக்குப் பொறியும், கோபால்ட் சாதனமும் வைக்கப்பட்டிருக்கும் இடம்.

gap : பிளவு : 1. இடைவாயில் 2. இடைமுறிவு. 3. புற்றுநோயில் வளர்ச்சிக் குறியீடாக்ச் செயற்படும் ஜி.டி.பேஸ் இயல்பூக்கப் புரதம்.

GAPO syndrome : 'கேப்போநோய்' : வளர்ச்சிக் குறைபாடு, தலை வழுக்கை, பல் முளையாதிருத்தல், கண் நலிவு போன்ற நிலைமைகள் உண்டாகும் நோய்,

garbage : குப்பை.

garden screws : கார்டன் திருகாணி : தொடையெலும்பின் கழுத்துப் பகுதியில் உண்டாகும் முறிவினை உள்முகமாகப் பொருத்துவதற்கான திருகாணி.