பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Gardenal

486

gastrectomy


Gardenal : கார்டினால் : ஃபினோ பார்பிட்டோன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

Gardner's syndrome : கார்ட்னர் நோய் : குடும்ப நோயாக ஏற்படும் பெருங்குடல் தொங்கு தசை நோய். இது எலும்பு சார்ந்த மென் திசுக்கட்டிகளுடன் உண்டாகும் அமெரிக்க மரபணுவியலறிஞர் எல்டான் கார்ட்னர் இதனை விவரித்தார்.

gargle : தொண்டை கழுவும் நீர்மம்; வாய்க் கொப்பளிப்பு; கொப்புளி : தொண்டையைக் கழுவுவதற்குப் பயன்படும் ஒரு கரைசல்.

gargoyle cells : நீர்த்தாரை உயிரணுக்கள் : சளிச்சவ்வு சர்க்கரைச் சேர்மங்கள் நிறைந்த லேசோசோம்கள் செறிந்துள்ள உயிரணுக்கள்.

Garoin : காரோயின் : ஃபெனிட்டாவின் சோடியம், ஃபினோபார் பீட்டோன் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர். காக்காய் வலிப்பு நோய்க்கு இது பயன்படுகிறது.

Gartner's duct : கார்ட்னர் நாளம் : கருப்பையை ஒட்டியுள்ள சிறு நீரகச் சவ்வு நாளம். டேனிஷ் அறுவை மருத்துவ வல்லுநர் ஹெர்மன் கார்ட்னர் பெயரால் அழைக்கப்படுகிறது.

gas : வாயு; வளிமம்; ஆவி : ஒரு பொருளின் மூன்று நிலைகளில் ஒன்று வாயுநிலை திடநிலையும், திரவநிலையும் மற்ற இரு நிலைகளாகும். வாயு வெளிப்படும்போது அதன் வடிவையும் கனஅளவையும் அப்படியே இருத்தி வைத்துக் கொள்வதில்லை.

gasometry : வாயு அளவீடு : ஒரு கலவையில் வாயு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மதிப்பிடுதல்.

gasping baby syndrome : குழந்தை மூச்சுத் திணறல் நோய் : குறைமாதக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இதில் கடுமையான வளர்ச்சிதை மாற்ற அமிலப் பெருக்கம், மூளைக் கோளாறு, சுவாசக் குறைபாடு உண்டாகும். கிருமி வளர்ச்சித் தடைக் கரைசல்கள் அடங்கிய பென்சில் ஆல்கஹாலை அடிக்கடிக் கொடுப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.

gasserectomy : நரம்புக்கணு அறுவை மருத்துவம் : நரம்பு மண்டல மையத்தை அறுவை மருத்துவம் மூலம்வெட்டியெடுத்தல்.

gastralgia : வயிற்று வலி; இரைப்பை வலி : வாயுக் கோளாறினால் ஏற்படும் வயிற்று வலி.

gastrectomy : இரைப்பை அறுவை மருத்துவம்; இரைப்பை நீக்கம்; இரைப்பை அகற்றல் : இரைப்பையின் ஒரு பகுதியை அல்லது இரைப்பை முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.