பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gastric

487

gastroenteroscope


gastric : அடிவயிறு சார்ந்த இரைப்பைகள்; இரைப்பை சார்ந்த : இரைப்பையில் சுரக்கும் நீர் அமிலமாவதால் அடிவயிற்றில் வலி உண்டாகிறது. இதனால், உணவு உண்டதும் வயிற்றுவலி ஏற்படுகிறது.

gastric fever : குடற் காய்ச்சல்.

gastric juice : இரைப்பை நீர்.

gastrin : இரைப்பைச் சுரப்புப் புரதம் : இரைப்பைக்குள் உணவு சென்றதும் சுரக்கும் ஒரு வகை இயக்குநீர் (ஹார்மோன்) இது இரைப்பை நீர் மேலும் சுரப்பதற்கு வழி செய்கிறது.

gastrinoma : கணையக் கட்டிச் சுரப்பு : கணைய உயிரணுக் கலவைக் கட்டியிலிருந்து சுரக்கும் காஸ்டிரின். இது சோலிங்கர் எல்லிசன் நோயுடன் தொடர்புடையது.

gastritis : இரைப்பை அழற்சி; இரைப்பை வீக்கம் : இரைப்பையில் ஏற்படும் வீக்கம்.

gastrocele : இரைப்பைக் கட்டி; இரைப்பைப் பிதுக்கம்.

gastrocnemius : கெண்டைக்கால் தசை : கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை.

gastrocolostomy : இரைப்பை அறுவைச் சிசிக்சை : இரைப்பையைப் பெருங்குடலுடன் அறுவை மருத்துவம் மூலம் பிணைத்தல்.

gastroduodenoscopy : இரைப்பை அகச்சோதனை : இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றை அகநோக்குக் கருவி மூலம் ஆய்வு செய்தல்.

gastrodynia : இரைப்பை நோவு; இரைப்பை வலி.

gastroenteritis : இரைப்பை குடல் அழற்சி : இரைப்பையிலும், சிறு குடலிலும் சளிச் சவ்வில் ஏற்படும் வீக்கம். நுண்ணுயிரியல் காரணமாக இது உண்டாகிறது. குழந்தைகளிடம் நோய்க் கிருமிகளினால் ஏற்படுகிறது.

gastroenteroanastomosis : இரைப்பை-சிறுகுடல் இணைப்பு : இரைப்பைச் சிறுகுடலுடன் அறுவைச் சிகிச்சை மூலம் பிணைத்தல்,

gastroenterology : இரைப்பை குடல் ஆய்வியல்; இரைப்பைக் குடலியல் : நுரையீரல், பித்தநீர்க் குழாய், கணையம் போன்ற செரிமான உறுப்புகள் பற்றியும், அவற்றில் உண்டாகும் நோய்கள் பற்றியும் ஆராய்தல்.

gastroenteropathy : இரைப்பை குடல் நோய் : இரைப்பையிலும், குடலிலும் ஏற்படும் நோய்கள்.

gastroenteroscope : இரைப்பை-குடல் நோய் காணும் கருவி : இரைப்பையிலும், குடலிலும் உண்டாகும் நோய்களைக் கண்ணால் பார்த்தறிவதற்குப் பயன்படும் கருவி.