பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gastroenterostomy

488

gastrotomy


gastroenterostomy : இரைப்பை சிறுகுடல் பிணைப்பு; இரைகுடலிணைவு : இரைப்பையையும் சிறுகுடலையும் அறுவை மருத்துவம் மூலம் பிணைத்தல்.

Gastrografin : கேஸ்டிரோகிராஃபின் : சோடியமும், மெக்ளுமின் டயாட்ரிசோயேட்டும் கலந்த கலவை மருந்தின் வாணிகப்பெயர். குருதிப் போக்குக்குக் கொடுக்கப்படும் மருந்து.

gastrooesophageal : இரைப்பை-உணவுக்குழாய் சார்ந்த : இரைப்பை மற்றும் உணவுக் குழாய் சார்ந்த.

gastrooesophagostomy : இரைப்பை உணவுக்குழாய் இணைப்பு : இரைப்பையுடன் உணவுக் குழாயை இணைப்பதற்கான அறுவை மருத்துவம்

gastropathy : வயிற்று நோய்; இரைப்பை நோய் : இரைப்பையில் ஏற்படும் ஒரு நோய்.

gastropexy : இரைப்பையைப் பொருத்துதல் : இடம் பெயர்ந்த இரைப்பையை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.

gastrophrenic : இரைப்பை-உதர விதானம் சார்ந்த : இரைப்பை மற்றும் உதரவிதானம் சார்ந்த.

gastroplasty : இரைப்பை பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் : இரைப்பையின் நெஞ்சுப்பைத் துவாரத்தை மீண்டும் அமைப்பதற்காக இரைப்பையில் செய்யப்படும் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம்.

gastroptosis : இரைப்பை கீழ்நோக்கி; இரைப்பை கீழிறக்கம்; இடம் பெயர்தல் : இரைப்பை கீழ் நோக்கியவாறு இடம் பெயர்ந்திருத்தல்.

gastrochisis : உள்ளுறுப்பு புறநீட்சி : அடிவயிற்றுச் சுவர் பிறவிலேயே முழுமையாக முடாதிருத்தல். இதனால் உள்ளுறுப்புகள் இரட்டைச் சவ்வுப் பையினால் மூடப்படாமல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

gastroscope : இரைப்பை அகநோக்குக் கருவி; இரைப்பை நோக்கி : இரைப்பையின் உட்பகுதியைப் பார்ப்பதற்குப் பயன் படுத்தப்படும் அகநோக்குக் கருவி.

gastrostomy : செயற்கை உணவுக்குழல்; இரை உதர இணைவு : இரைப்பைக்கும் புற அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் அறுவை மருத்துவம் மூலம் செயற்கை முறையில் உணவூட்டுவதற்காக உண்டாக்கப்படும் ஒரு குழல்.

gastrotomy : அடிவயிற்றுத் துளை மருத்துவம்; இரைப்பை அறுவை; இரைப்பைத் துளைப்பு; இரைப்பை உதர இணைவு : அடிவயிற்றில் அறுவை மருத்துவம் செய்யும்