பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gingivitis

494

glasses


gingivitis : பல்லெயிற்று வீக்கம்; ஈறு வீக்கம்; எயிறு அழற்சி; ஈறு அழற்சி : பல் வீக்கத்தினால் உண்டாகும் எரிச்சலினால் ஏற்படும் எயிற்று வீக்கம்.

girdle : வளையம்; அரைக்கச்சை; என்பு வளையம்; இருப்பு : கை கால்களைத் தாங்கும் என்பு வளையம், தோல் பட்டை வளையம்,

girth : சுற்று.

girth: abdominal : வயிற்றுச் சுற்று.

gland : சுரப்பி : உள்ளே அல்லது சுரப்பு நீரைச் சுரந்திடும் கரப்பி. உடலின் இயக்கத்திற்குத்தேவையான பொருள்களைச் சுரக்கும் உடலின் பகுதி. வியர்வைச் சுரப்பி, பால் சுரப்பி, நிணநீர்ச்சுரப்பி, செரிமானத்திற்கு உதவும் திரவங்களைச் சுரக்கும் கணையம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.

gland,adrenal : மேனிச் சுரப்பி.

gland,ductless : நாளமில் சுரப்பி.

gland,sweat : வியர்வைச் சுரப்பி.

gland,endocrine : உட்சுரப்பி.

gland,lacrimal : கண்ணீர் சுரப்பி.

glanders : குதிரைச் சயம்; புரவிக் காய்ச்சல் : குதிரை, கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றிடமிருந்து மனிதரைத் தொற்றிக் கொள்ளும் சயநோய்.

gland,lymphatic : நிணநீர்ச் சுரப்பி.

gland,salivary : உமிழ்நீர்ச் சுரப்பி.

gland.sebaceous : நெய்மச் சுரப்பி.

gland,sex : செனிப்புச் சுரப்பி.

gland,thyroid : கேடயச் சுரப்பி.

glans : முகை.

glans,clitoridis : யோனி முகை.

glands,penis : குறி முகை.

glandular : சுரப்பி சார்.

glandule : நுண்சுரப்பி.

glare : ஒளிக்கூச்சம்.

glasses : கண்ணாடிகள்.