பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

glucose toleran...

497

glycine


லிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, இது நுரையீரலில் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப் படுகிறது.

glucose tolerance test (GTT) : குளூக்கோஸ் தாங்குதிறன் சோதனை (GTT : ஒரு கால அளவுக்குப் பட்டினியாக இருந்த பிறகு ஒரு வேளை குளுக்கோஸ் அளவுக்கு உடலில் ஏற்படும் துலங்கலைச் சோதனை செய்தல், நீரிழிவு நோயைக் கண்டறிய இந்தச் சோதனை கையாளப்படுகிறது.

glucosuria : சிறுநீர்க் குளூக்கோஸ் நோய் : சிறுநீரில் குளுக்கோஸ் இருத்தல்.

glue ear : காதுப் பசை : காதின் மையப்பகுதியில் திரளும் பசை போன்ற பொருள். இது திரண்ட செவிப்பறையை விரிவாக்கிக் கேட்கும் திறனைக் குறைக்கும்.

glutamate : நரம்புச் செய்தியனுப்புச் சாதனம் : மூளையிலுள்ள நரம்புச் செய்தியனுப்புச் சாதனம். இது நினைவாற்றலில் பங்கு பெறுகிறது.

glutaminase : குளுட்டாமினேஸ் : குளுட்டாமினைச் சிதைத்து குளுட்டாமிக் அமிலமாகவும் அமோனியாவாகவும் பகுப்பதற்கு வினையூக்கியாகச் செயற்படும் ஒரு செரிமானப்பொருள்.

gluteal : பிட்ட.

gluten : மாப்புரதம்; பசையம் : விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப் பொருள். இது நீரில் கரையாது.

Glutril : கிளட்ரில் : கிளிபோனூரைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

glycaemia : குருதிக் குளுக்கோஸ் : இரத்தத்தில் குளுக்கோஸ் இருத்தல்.

glycerin(e) : கரிநீர்ப் பாகு : கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்ட, மருந்துக்கும் பூச்சு நெய்க்களிம் புகளுக்கும் வெடி மருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப் பொருள்.

glycerol : கிளைசெரால் : பல்வேறு கொழுப்புப் பொருள்களில் அடங்கியுள்ள ஒர் அமைப்பான். இது சீரணத்தின்போது உணவிலிருந்து வெளியாகி, தனியாகவோ கொழுப்பு அமிலங்களுடன் இணைந்தோ ஈர்த்துக் கொள்ளப்படுகிறது.

glycerophosphates : கிளிசரோபாஸ்ஃபேட் : உடலூக்க மருந்துக் கலவையில் சேர்க்க பசியைத் தூண்டும்.

glyceryl trinitrate : கிளிசரில் டிரினிட்ரேட் : குருதி நாள விரிவகற்சி மருந்து. இது மாத்திரைகளாகக் கிடைக்கிறது. மாத்திரையை வாயில் போட்டு உமிழ்நீரில் கரைத்து உட்கொள்ள வேண்டும்.

glycine : கிளைசின் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.