பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gnosia

499

gonadotrophin


gnosia : உணர்திறன் : ஒருவருடைய அல்லது பொருளுடைய வடிவத்தையும் இயல்பையும் உணர்ந்து கொள்ளும் திறன்.

goblet cells : கிண்ண உயிரணு : கிண்ணம் போன்ற வடிவுடைய ஒரு தனிவகைச் சுரப்பு உயிரணு, இது சளிச்சவ்வில் காணப்படுகிறது. இது குடுவை உயிரணுவாகும்.

Goeckerman regime : யானைச் சொறிச் சிகிச்சை : யானைச் சொறி எனப்படும் நமட்டுச் சொறி நோயைக் குணப்படுத்து வதற்கான ஒரு முறை. இதில், புற ஊதாக்கதிர் காட்டுவதும், கீல் எண்ணெய் பூசுவதும், மாற்றி மாற்றிச் செய்யப்படுகிறது.

goggle-eyed : முட்டைக் கண் : விழி பிதுங்கி, விழி உருண்டு திரண்டிருத்தல்.

goitre : குரல் வளைச் சரப்பி வீக்கம்; கழலை; கண்டமாலை; சுரப்பிக் கழலை; கேடய வீக்கம் : குரல் வளை தொங்கு சதையாக வீங்கி ஆறாதிருக்கிற கோளாறு.

goitrogens : குரல்வளைச் சுரப்பி வீக்கப் பொருள் : குரல்வளைச் சுரப்பி வீக்கத்தை உண்டாக்கும் பொருள்கள்.

Goldflam's disease : கோல்ட்பிளாம் நோய் : தசைநலிவி நோய் போலந்த நரம்பியலறிஞர் சாமுவேல் கோல்ட்பிளாம் பெயரால் அழைக்கப்படுகிறது.

golfer's elbow : முழங்கை பின்புற வலிப்பு : கைத் தசைகளை அளவுக்கு அதிகமாகப் பயன் பத்துவதால் முழங்கையின் உட்பகுதியில் கடும் வலியுடன் வீக்கம் உண்டாதல். இது கையையும் மணிக்கட்டையும் பின் புறமாக வலித்து இழுக்கும்.

golf-hole ureter : குழிப்பந்தத் துவார மூத்திரக் கசிவு நாளம் : சவ்வுப் பையிலுள்ள மூத்திரக் கசிவு நாளத்தின் புழைவாய். இது, மூத்திரக் கசிவு நாளம் பின்னடைவதன் காரணமாக ஆழமான துவாரமாக ஏற்படுகிறது.

Golgi's apparatus : கோல்கி சாதனம் : ஒரு சிக்கலான இழைம உறுப்பு. இத்தாலிய உடல் உட்கூறியலறிஞர் கேமில்லோ கோல்கி இதனை விளக்கிக் கூறினார்.

Goltz's syndrome : கோல்ட்ஸ் நோய் : குவிமைய தோல் திசு வளர்ச்சிக் கோளாறு. இது அரிதாக ஏற்படும் பிறவிக் கோளாறு. ஜெர்மன் மருத்துவ அறிஞர் ஃபிரடரிக் கோல்ட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

gonald : இருபால் உயிரணு மையம்; ஈனுறுப்பு : ஆண்-பெண் உயிரணு உருவாகும் உறுப்பு.

gonadotrophin : இருபால் உயிரணு உறுப்பு இயக்கு நீர் : ஆண்-பெண் இரண்டாம் பொதுவான நுண்ம உயிர்மத்தைத்