பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

H

H: "எச்" (H) : 1. ஹைட்டிரஜனுக் கான குறியிடு, 2. ஹவுஸ்ஃபீல்ட் அலகு. 3. காந்தப் புலத்தின் வலிமை.

habenula : ஹேபனுலா : 1 சாட்டை போன்றதொரு அமைப்பு. 2. மூளையின் நடு மூளைச் சுரப்பியுடன் இணைந்துள்ள தலைக்காம்பு. 3. ஒரு குறுகிய பட்டைபோன்ற அமைப்பு. 4. முதுகுப்புறக் குருதிக் குழாய் மூளையறைப் புடைப்பு. இதில் நுகர்வுணர்வு, உள்ளுறுப்பு, உடலுறுப்பு நடு ஈர்ப்பு வழிகள் ஒருங்கிணைக்கின்றன.

habilitation : தற்சார்பு வளர்ச்சி : ஒரு குழந்தை உடல் அளவிலும், உளவியல் அளவிலும் உயர்ந்த அளவு தற்சார்பினைப் பெறுவதற்குப் படிப்படியாக வளர்ச்சியடைவதற்கான வழி முறை.

habit : மனப்பாங்கு; பழக்கம்/வழக்கம் : ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில் அல்லது தூண்டுதலின்போது நடந்து கொள்ளும் பழக்கம் அல்லது உடற்பாங்கு இது வளரும் வகை அல்லது முறையினால் உருவாகிறது.

habituation : பழக்கப்படுத்துதல்; வழக்கமாக்கல் : திரும்பத் திரும்ப ஏற்படும் ஒரு தூண்டுதலுக்குக் குறைந்த எதிர்வினை உண்டாவதன் மூலம் தகவமைத்துக் கொள்ளும் துலங்கல்.

habitude : உடற்பாங்கு : பழக்கம்; போக்கு மனப்பாங்கு.

habitual obortion : வாடிக்கைக் கருக்கலைப்பு; வழக்கக் கருச்சிதைவு : வாடிக்கையாகக் கருச்சிதைவு செய்தல்.

habituation : பழக்கப்படுத்துதல்; வழக்கப்படுத்துதல்; வழக்கமாதல் : ஒருவகை நடத்தை முறையைப் பழக்கமாக வளர்த்துக் கொள்ளுதல். பொதுவாக, இது எதிர்மறைப் பழக்கத்தையே குறிக்கும். எடுத்துக்காட்டாக, தூக்க மாத்திரை அருந்தி உறக்கங்கொள்ளுதல், போதை மருந்துப்பழக்கம் போன்றவற்றைக் கூறலாம். habitus : உடல் தோற்றம் : 1. பொதுவான உடல் தோற்றம். 2. உடல் கட்டமைப்பு.

haem : குருதிச் சிவப்பு : குருதிச் சிவப்புப் பொருளில் பிசிதம் சேர்ந்த வண்ணப் பொருள்.