பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

haemodiagnosis

511

haemolysis


haemodiagnosis : குருதிவழி நோய் நாடல் : இரத்தத்தை ஆய்வு செய்து நோயைக் கண்டறிதல்.

haemodialysis : குருதிக் கலைப் பிரிவினை : சிறுநீரகம் செய லிழக்கும் போது சிறுநீர்க் கலவைப் பொருள்களைப் பிரித்தல். இதில் இரத்தம் ஒர் எந்திரம் வழியே செலுத்தப்பட்டு, உடலுக்குத் திரும்பி வருவதற்கு முன்பு தூய்மையாக்கம் செய்யப்படுகிறது.

haemodilution : குருதி நீர்ப்பு : இரத்தப் போக்கு ஏற்பட்டு, குருதிநீர் அளவு பெருக்கமடை வதையொட்டி ஆர்பிசி அளவு குறைதல்.

haemodynamics : குருதியோட்ட இயக்கம் : உடலில் இரத்தவோட்டம் நடைபெறும் இயக்கங்கள்.

haemoglobin : செங்குருதியணு; குருதிச் சிவப்பணு நிறமி; குருதி நிறமி : செந்நிறக் குருதியணுவுடலியின் வண்ணப்பொருள். இது இரும்புச் சத்தினாலானது. இதில் மறிநிலை ஆக்சிஜனும் உள்ளது.

haemoglobinaemia : குருதி நிணநீர் சிவப்பணு நிறமி : குருதி நிண நீரில் குருதி சிவப்பணு நிறமிகள் இருத்தல்.

haemoglobinometer : குருதிச் சிவப்பணு நிறமி மானி : இரத் தத்திலுள்ள குருதிச் சிவப்பணு நிறமியை அளவிடுவதற்கான கருவி.

haemoglobinopathy : குருதிச் சிவப்பணு நிறமிக் கோளாறு : குருதிச் சிவப்பணு நிறமி இயல்பு மீறியதாக இருத்தல்.

haemoglobinuria : சிறுநீர்ச் சிவப்பணு நிறமி; குருதி நிறயிழிவு : சிறுநீரில் குருதிச் சிவப்பணு நிறமி இருத்தல்.

haemogram : குருதி ஆய்வு : உருவாக்கப்பட்ட தனிமங்கள் அனைத்திலும் உயிரின அமைப்பியல் எண்ணிக்கை, வீத அளவு ஆகிய வற்றைக் கண்டறிவதற்காகக் குருதியை விரிவாக ஆய்வு செய்தல்

haemophilia : காயக் குருதிப் பெருக்கம் : சிறிய காயங்களிலிருந்தும் இரத்தம் பெருக்கும் பரம்பரை நோய்.

haemolysin : ஹீமோலைசின்; குருதிச் சாறு இளக்கி; குருதி முறி : இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும் மருந்து. மருந்து அல்லது நொதி.

haemolysis : குருதிச் சிவப்பணுச் சிதைவு; குருதிச் சிவப்பணு அழிப்பு; குருதிக் குலைவு : இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் சிதைந்து அதிலுள்ள குருதிச்சிவப்பணு நிறமிகள் வெளிப்படுதல்.