பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

haemolytic dis...

512

haemorrhagic dis...


haemolytic disease of new born : குழந்தை குருதிச் சோகை : குழந்தையின் இரத்தத்திலும், தாயின் இரத்தத்திலுமுள்ள உறைமக்கூறு மாறுபடுவதால், பிறந்த குழந்தைக்கு ஏற்படும் குருதிக் கோளாறு. இதனால், குழந்தையின் சிவப்பணுக்கள் அழிந்து விடுகின்றன. இரத்த சோகை உண்டாகிறது; மஞ்சள் காமாலை நோயும் ஏற்படும்.

haemopathy : குருதி நோய் : குருதியில் அல்லது குருதி உருவாக்க முறையில் ஏற்படும்.

haemopericardium : குலையுறைக் குருதி; இதயச் சுற்றுப்பை குருதி; இதய உறை குருதிமை : குலையுறையில் குருதி சேர்ந்திருத்தல்.

haemoperitoneum : வபைக்குருதி; குருதி உதரப்பை : வயிற்றின் உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையில் (வபை) இரத்தம் சேர்ந்திருத்தல்.

haemophil : குருதி நுண்ணுயிர் பெருக்கம் : குருதி அடங்கியுள்ள ஊடகத்தில் நுண்ணுயிரிகள் பெருக்கமடைதல்.

haemophilias : குருதிப் பெருக்கு நோய்; குருதி உறையாக் கேடு : சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கம் ஏற்படும் பரம்பரை நோய்,

haemophobia : குருதி வெறுப்பு : இரத்தப் போக்கை அல்லது இரத்தத்தைப் பார்க்கும் போது ஏற்படும் வெறுப்பு

haemophthalmia : கண் விழிக்குருதிக் கசிவு : கண் விழியில் இரத்தம் கசிதல்.

haemopneumothorax : நுரையீரல் உள்வரிச் சவ்வுக் குழிக்குருதி; குருதி வளி மார்பு : உள்வரிச் சவ்வுக் குழாயில் இரத்தமும், காற்றும் சேர்ந்திருத்தல்.

haemopoiesis : குருதி உருவாதல்; குருதியாக்கம்.

haemoptysis : இரத்த வாந்தி; இரத்த இருமல்.

haemorrhage : குருதிப் போக்கு; குருதி ஒழுக்கு; இரத்தப் பெருக்கு : குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் நிற்காமல் வெளிப்படுதல்.

haemorrhage, Ante paetuam : பேறு கால முன்போக்கு.

haemorrhage, uterine : கருப்பை இரத்தக் கசிவு.

haemorrhage intertinol : குடல்குருதிக் கசிவு.

haemorrhage, postpartum : பேறுகால பின் போக்கு.

haemorrhagic disease of new born : குழந்தை குருதிப் போக்கு நோய் : பிறந்த குழந்தைகளுக்கு இரப்பையிலும், குடலிலும்