பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

haemorrhagic fever

513

hairfollicle


ஏற்படும் இரத்தப் போக்கு நோய்.

haemorrhagic fever : குருதிப்போக்குக் காய்ச்சல் : கொசுவினால் பரவும் குருதிப் போக்குக் காய்ச்சல். haemorrheology : குருதிப் போக்கு ஆய்வியல் : குருதி நாளங்களில் ஏற்படும் குருதிப்போக்கு குறித்து ஆய்வு செய்தல்.

haemorrhodial : மூல நோய் சார்ந்த : குதவாய்ப் பகுதியில் உண்டாகும் மூல நோய்.

haemorrhoidectomy : மூலநோய் அறுவை மருத்துவம்; மூல நீக்கம் : மூலத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

haemorrhoids : மூலநோய்; மூலம் : குதவாய்ப் பகுதியிலுள்ள நாளங்களில் உண்டாகும் நாளப் புடைப்பு.

haemosiderosis : திசு அயப் படிவு : திசுக்களில் அயச்சத்து படிதல்.

haemospermia : குருதி விந்துக் கசிவு : விந்துடன் கலந்து இரத்தம் வெளியேறுதல்.

haemostasis : குருதித் தடை; குருதிக் கழிவுத் தடை : குருதி நாளத்திற்குள்ளேயே குருதி தேங்கியிருத்தல்.

haemostat : குருதிப் போக்குத் தடைக் கருவி : குருதிப் போக்கினை நிறுத்தும் கருவி.

haemotherapy : குருதியூட்ட சிகிச்சை : குருதியூட்டம் போன்ற சிகிச்சையில் குருதி அமைப்பான்கள்.

haemothorax : மார்புவரிக் குருதி; குருதி மார்பறை; நுரையீரலுறைக் குருதிமை : மார்பு உள்வரிச் சவ்வுக் குழியில் இரத்தம் சேர்ந்திருத்தல்.

haemotrophic : குருதி ஊட்டப்பொருள் சார்ந்த : குருதியில் கொண்டு செல்லப்படும் ஊட்டச்சத்துப் பொருள்கள் சார்ந்த.

Hageman factor : ஹேக்மான் காரணி : குருதி உறைவின் உள்ளார்ந்த வழியை உண்டாக்கும் குருதி உறைவுக் காரணி XII.

hair : மயிர்; முடி : மனிதரின் உள்ளங்கை, உள்ளங்கால், உதடுகள், ஆண்குறி ஆகிய உறுப்புகள் நீங்கலாக தோலின் எல்லாப் பகுதிகளிலும் வளர்ந் திருக்கும் மயிரிழைகள்.

hair analysis : மயிரிழையைப் பகுப்பாய்வு : ஆர்செனிக் ஈயம், பாதரசம் போன்ற கடுமையான கன உலோகப் போதையைக் கண்டுபிடிப்பதற்காக மயிரிழையைப் பயன்படுத்துதல்.

hair-ball : முடிப்பந்து; மயிர்ப்பந்து : இரைப்பையில் தொகுதியாகும் மயிர்.

hairfollicle : மயிரிழைச் சுரப்பி : தோலின் கோரியம் படலத் திலுள்ள மேலடுக்கினை ஒரு நீள் உருளை உறையிலிடுதல்.