பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

harmony

Hay's test


harmony : ஒத்திசைவு : சுமுகமாக ஒன்றிணைந்து செயற்படும் அல்லது வாழும் நிலை.

Hartmann's solution : ஹார்ட்மன் கரைசல் : சோடியம் லாக்டேட், குளோரைட், பொட்டாசியம் குளோரைட், நியோமைசின் ஆகியவை அடங்கிய ஒருவகை மின் பகுப்புக் கரைசல்.

Hartnup disease : ஹார்ட்னப் நோய் : உடல் வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்களின் ஒன்றான டிரிப்டோபான், சிறு நீரக மற்றும் குடல் வழியே செல்வதில் ஏற்படும் கோளாறு. இது மிக அரிதாக ஏற்படும் பரம்பரை நோய். இந்த நோய் ஏற்பட்ட முதல் குடும்பத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.

Hashimoto's disease : ஹாஷிமோட்டோ நோய் : நடுத்தர வயதுப் பெண்களுக்குக் கேடயச் சுரப்பி (தைராய்டு) விரிவடைவதால் உண்டாகும் நோய்.

haustration : ஊனீர் சுரப்பி : பெருங்குடலில் உள்ளது போன்று ஊனீர் சுரத்தல்.

Haverhill fever : ஹேவர்ஹில் காய்ச்சல் : ஹ்டிரெப்டோபா சில்வஸ் மோனிலிஃபார்மிஸ் என்ற கிருமி பரவும் காய்ச்சல் நோய், இது எலிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் அமெரிக்காவில் ஒரு கொள்ளை நோயாகப் பரவியது. அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஒரு நகரின் பெயரால் அழைக்கப் படுகிறது.

Haversian gland : ஹேவர்சியன் சுரப்பி : உயர்வுத் திசுவின் மேற் பரப்பிலிருந்து இணைப்பு இடைவெளிக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு நுண்ணிய சுரப்பி. இது உயவு நீர்மத்தைச் சுரக்கிறது.

Haversian system : ஹேவர்சியன் மண்டலம் : ஹேவர்சியன் குழாய், ஒரே மையமுடையதாக அமைந்த அதன் செதிளடுக்கு அடங்கிய மண்டலம் நெருக்கமான கட்டமைப்பின் அடிப்படை அலகாக இது அமைந்துள்ளது.

Hay fever : தூசுக் காய்ச்சல்; தும்மல் காய்ச்சல், மறி நீர்க்கோளம் : தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக்காய்ச்சல்.

Haygarth's nodes : மூட்டு வீக்கம் : விரல் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மூட்டு வலியுடைய நோயாளிகளுக்கு இது உண்டாகும்.

Hay's test : ஹேய் சோதனை : பித்தநீர் உப்புகளுக்கான சோதனை. ஒரு சிட்டிகை கந்தகத்தைச் சிறுநீரில் சேர்க்கும்போது, உப்புகள் இருந்தால் அந்தக் கந்தகம் அமிழும்; இல்லாதிருந்தால் மிதக்கும். ஸ்காத்லாந்து மருத்துவ அறிஞர் மேத்தியூ ஹேய் பெயரால் அழைக்கப்படுகிறது.