பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

helium

523

hemiatrophy


helium : ஹீலியம் (பரிதியம்) : கதிரவன் மண்டலத்தில் இருப்ப தாகக் கருதப்பட்ட ஒரு வாயுத் தனிமம். இது 1868 இல் கண்டு பிடிக்கப்பட்டது. சில சமயம் ஈளை நோயாளிக்கு மருத்துவம் அளிக்க ஆக்சிஜனுடன் இதனைக் கலந்த கொடுக்கப்படுகிறது.

Heller's operation : ஹெல்லர் அறுவை மருத்துவம் : உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கு மிடையிலான சந்திப்பிலுள்ள தசைப்படலத்தைப் பிளவு செய்தல், விழுங்குவது சிரமமாக இருக்கும் போது இவ்வாறு செய்யப்படுகிறது.

helmet : தலைக்கவசம்.

helminth : குடற்புழு.

helminthagogue : குடற்புழு மருந்து : குடற்புழுவை வெளிக் கொண்டுவரும் மருந்து.

helminthemesis : குடற்புழு வெளியேற்றம் : வாயின் வழியாகக் குடலிலுள்ள புழுக்களை வாந்தியெடுத்தல் அல்லது வெளியேற்றுதல்.

helminthiasis : புழுநோய் : குடற்புழுவினால் உண்டாகும் நோய். புழுவின் உடல் ஆக்கிரமிப்பு.

helminthoid : குடற்புழு வடிவுடைய.

helminthology : குடற்புழுவியல் : ஒட்டுண்ணிக் குடற்புழுக்கள் பற்றிய ஆய்வியல்.

helminthoma : திசுக்கழலை : குடல்புழு அல்லது அதன் பொருள்கள் மூலம் உண்டாகும் திசுக்கட்டிக் கரணை.

hemangioblast : இரைப்பைத் தோல் உயிரணு : குருதி நாள உள்வரித் தாள் சவ்வுக்கும் குருதி உருவாக்க உயிரணுக்களுக்கும் வழி வகுக்கும் இரைப்பைத் தோல் உயிரணு.

hemangioblastoma : உள்வரிச் சவ்வுக் கட்டி : நன்கு வரையறுக் கப்பட்ட, மெதுவாக வளர்கிற, உக்கிரமற்ற கட்டி இதில் உள்வரித்தாள் சவ்வு உருவாக்குகிற தந்துகி நாளப் பரவல் அடங்கியுள்ளது.

hemeralopia : ஒளிக்கூச்சம்; பகற் குருட்டுத்தன்மை : பிரகாசமான ஒளியில் பார்வை மங்குதல். இது இரவுக் குருட்டிலிருந்து வேறுபட்டது.

hemiageusia : சுவையுணர்வு இழப்பு : நாக்கின் ஒரு பக்கத்தில் மட்டும் சுவை உணர்வு இழத்தல்.

hemianopia : அரைக்குருடு; பாதிப் பார்வை; அரைப்புலக் குருடு, பகுதிப் பார்வையிழப்பு : அரைப்பார்வை மங்கல்.

hemiatrophy : ஒரு பக்கத் தேய்வு; பகுதி உறுப்பு நலிவு; பக்கத் தேய்வு :முகத்தின் ஒரு பாதி நலிந்து தேய்வுறுதல். இது ஒரு பிறவிக் கோளாறு.