பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hemibladder

524

Henoch sch..


hemibladder : அரைப்பை : வளர்ச்சி பிறழ்வு, இதில் தேங்குபை தனித்தனியே கசிவு நாளத்துடன் இரு பகுதிகளாக அமைந்திருக்கும் அரைப்பை.

hemiblock : இதயத் தூண்டல் தடை : திசுக்கற்றையின் இடப் பக்கக்கிளையின் இரு முக்கிய பிரிவுகளில் ஒன்றில் இதயத் தூண்டல் செல்லுதல் தடைபடுதல்.

hemichorea : ஒருபக்க வலிப்பு : காக்கா வலிப்பு நோயின் ஒரு வகை. இதில் உடலின் ஒரு பகுதி மட்டுமே வலிப்புக்குள்ளாகும்.

hemicolectomy : பெருங்குடல் அறுவை மருத்துவம் : பெருங்குடலின் ஒரு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

hemicrania : ஒருபுறத் தலைவலி; ஒற்றைத் தலைவலி; ஒரு பக்கத் தலைவலி : ஒற்றைத் தலைவலி போன்ற ஒருபக்கத் தலைவலி.

hemidiaphoresis : ஒரு பக்கவியர்வை : உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் வியர்த்துக் கொட்டுதல்.

hemigastrectomy : இரைப்பை அறுவை மருத்துவம் : இரைப் பையின் பாதிப்பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

hemiglossectomy : பாதி நாக்கு அறுவை : நாக்கின் பாதிப் பகுதியை அகற்றிவிடுதல்.

Heminevrin : ஹெமிநெவ்ரின்: குளோர்மெத்தியாசெல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

hemiparesis : ஒருபுறவாதம்; பாதி உடல் தளர்வு; பாதி முகத் தளர்வு : முகத்தின் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் இலேசான வாதம் உண்டாதல்.

hemiplegia : ஒருபக்க வாத நோய் : ஒருபுறமாகச் செயலற்ற தன்மையூட்டும் வாதநோய்.

hemisphere : அரைக் கோளம்; அரைவட்டம் : ஒரு கோள வடிவின் அல்லது உறுப்பின் பாதிப் பகுதி.

hemisphere, cerebral : பெருமூளை.

hemispherectomy : மூளைப் பகுதி நீக்கம் : காக்காய் வலிப்புச் சிகிச்சையின் போது, மூளையின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். இது பகுதியாகவோ முழுமையாகவோ இருக்கலாம்.

hemivertebra : முதுகெலும்பு வளர்ச்சிக் குறைபாடு : முதுகெலும்பின் ஒரு பக்கம் முழுமை பெறாமல் வளர்ந்திருத்தல்.

Henbane : நச்சு மயக்க மருந்து.

Henoch schonlein purpura : தோற்படைக் குருதி கசிவு : தோலின் மேல் காணப்படும்