பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

heterophagy

529

hexopal


heterophagy : அயல் உயிரணுச் சீரணம் : உயிரணுவின் சுற்றுச் சூழலிலிருந்து துகள் சூழ் உயிரணுவாக்கிய ஒரு பொருளின் உயிரணுவுக்குள் நடைபெறும் சீரணம்.

heterophil : முரணிய ஊனீர் நுண்மம் : 1. பலமுனைக் கரு வெள்ளணுவின் ஊனிர் நுண்மம், 2. முரணிய மரபணுக் காப்பு மூலம் சார்ந்ததும், தற்காப்பு மூலம் தொடர்புடையது.

heterophile : பலவேறு வினைப்பொருள் : இன்னோர் இனத்திற்கு எதிராகச் செயற்படக் கூடிய ஒர் இனத்தின் பொருள். எடுத்துக்காட்டாக, மனிதரின் காப்பு மூலம் ஆட்டின் இரத்த சிவப்பணுக்களுக்கு எதிராக வேலை செய்கிறது.

heterophonia : குரல் மாற்றம் : 1. முதிர்ச்சியடையும் குரல் மாறுதலடைதல், 2. குரல் ஒலிகளின் இயல்பு மீறிய தன்மை.

heteroplasia : திசுப்பிறழ்வு : 1.உறுப்புக்கு இயல்பாக இல்லாத உயிரணு வளர்ச்சி 2 திசுவின் பிறழ்வு நிலை.

heteroplasty : திசுமாற்ற மருத்துவம் : ஓர் இனத்திலிருந்து இன்னோ ரினத்துக்கு திசு மாற்ற மருத்துவம் செய்தல்,

heterosexual : வேற்றுப்பால் கவர்ச்சி; வேற்றுப்பால் புணர்; இயற்கைப் பாலிணைவுடையவர் : இயற்கையான பால் இணைவுடையவர்கள். எடுத்துக்காட்டாக, ஒர் ஆண் பெண்ணுடன் பாலுறவு கொள்ளவிழைதல்.

heterosexuality : விசித்திர பாலுணர்வு : எதிர்பாலினத் தவரிடையே விசித்திரமான கவர்ச்சி அல்லது பாலுணர்வு நடத்தை.

heterotaxy : உறுப்பு மாறாட்ட அடுக்கம்.

heterozygote : வெவ்வேறு பாலணுர்வால் உண்டாகும் உயிருரு : இரட்டைக் குழந்தைகளில் வெவ்வேறு கருமுட்டையில் உருவாகும் உயிருரு.

heterozygous : ஈரிய.

hexachlorophane : ஹெகுளோரோஃபேன் : தோலில கிருமி நீக்கம் செய்வதற்குப் பயன்படும் ஒருவகை மருந்து. தவறாகப் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு மூளைச் சேதம் உண்டாகலாம்.

hexamine : ஹைக்சாமைன் : சிறு நீர்க்குழாய் அறுவை மருந்துக்கு முன்பு பயன்படுத்தப்படும் நோய் நுண்மத்தடை மருந்து.

hexobarbitone : ஹெக்சோபார் பிட்டோன் : ஒருவகைத் தூக்க மருந்து.

hexopal : ஹெக்சோப்பால் : இன்னோசிட்டால் நிக்கோட்டினேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.