பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hinge joint

531

histidine


இதிலிருந்து பெருங்குடல் தொடங்குகிறது.

hinge joint : கீல்மூட்டு : முழங்கால் முட்டில் அல்லது முழங்கை முட்டில் உள்ளது போன்று நீட்டவும், வளைக்கவும் அனுமதிக்கிற, வகையில் இரு எலும்புப் பரப்புகள் இணைகிற கீல் மூட்டு.

hip : இடுப்பு; இனம் : இடுப்பு மூட்டுக்கிடைமட்டமாக இருக்கிற, இடுப்பு மூட்டை உள்ளடக்கிய உடலின் இடுப்புப் பகுதி.

hip bone : இடுப்பெலும்பு : இடுப்புச் சந்து எலும்பு.

hip disease : இடுப்பு நோய் : இடுப்புச் சந்தில் காளான் வகை வளர்ச்சியினால் ஏற்படும் கோளாறு.

hip-joint : இடுப்புச் சந்து.

hippocampus : பின்மூளை மேடு : மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளில் ஒன்று. இது நினைவாற்றல் தொடர்புடையது.

Hippocrates : ஹிப்பாக்கிரேட்டிஸ் : புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர்; தத்துவஞானி, தாம் பிறந்த ஊரான காஸ் என்னுமிடத்தில் ஒரு மருத்துவப் பள்ளியை நிறுவினார். "மருத்துவத்தின் தந்தை" எனப் போற்றப் படுபவர்.

hirsuties; hirsutism : மயிரடர்த்தி; மயிர் மிகைப்பு; மிகை முடி; அடர் முடி : உடலில் மயிர் காணப்படும் பகுதிகளில் அளவுக்கு மீறி மயிர் அடர்ந்து வளர்தல்.

hirudin : ஹிருடின்; குருதி உறைவுத் தடுப்பான் : குருதி உறிஞ்சும் உயிரினமாகிய அட்டையிலிருந்து சுரக்கும் ஒரு பொருள். இது குருதிக் கட்டைத் தடுக்கப் பயன்படுகிறது.

hirudinise : குருதி உறைவுத் தடுப்பு : குருதி உறைவுத் தடுப்பான் பொருளை ஊசி மூலம் செலுத்தி, குருதி உறையாமல் செய்தல்.

Hirudoid : ஹிருடாய்ட் : தோலின் மேல் நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் மருந்தின் வணிகப் பெயர்.

histamine : ஹிஸ்டாமின் : கம்பி உயிரணுக்களிலும், நீல வெள்ள ணுக்களிலும் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் உயிரியக்க அபின், இது ஒற்றை உயிரணுக்களிலும், நரம்பு உயிரணுக்களிலும், நாளமில் சுரப்பி உயிரணுக்களிலும் சுரக்கும். தசைகள் எளிதாகச் சுருங்குவதற்கு இது உதவுகிறது. இது இரைப்பை நீர் சுரப்புக்கு வலுவான ஊக்கியாகும்.

histidine : ஹிஸ்டிடின் : இரத்தச் சிவப்பணுக்களில் பரவலாக அமைந்துள்ள இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.