பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

homophil

536

Hoover's sign


homophil : குறித்த வகைத் தற் காப்பு மூலம் : குறிப்பிட்ட காப்பை மூலம் உருவாவதைக் தூண்டுகிற அந்தக் காப்பு மூலத்துடன் மட்டுமே வினைபுரிகிற ஒரு தற்காப்பு மூலத்தைக் குறிப்பது.

homosepiens : வாழும் மனித குலம் : இன்றைய வரலாற்றுக் காலத்தில் வாழ்கின்ற மனித இனம்.

homosexual : ஒருபால் புணர்; ஓரினச் சேர்க்கையாளர்; ஒரு பாலின விருப்பு; ஒரு பாலினம் : தன்னையொத்த பாலினத்தவர் மீதே பாலின விருப்புடையவர்.

homosexuality : ஓரினச் சேர்க்கை; ஓரின விழைவு : தன்னொத்த பாலினத்தவர் மீதே பாலின விரும்பமுடனிருக்கும் மனப்பாங்கு.

homothermic : வெம்பதக் குருதி உடைய.

homotonic, homotonous : ஒத்த குரல் தொனி கொண்ட.

homotransplant : மாற்று உறுப்பு இணைப்பு; ஓரின உறுப்பு மாற்றம் : ஒரே இனத்தைச் சேர்ந்த ஒப்புடையதல்லாத உறுப்பினர்களிடமிருந்து உறுப்புகளை அல்லது திசுக்களைப் பொருத்துதல்.

homotropic : ஓரிட நிகழ்வு : உடலின் ஒரே இடத்தில் அல்லது உறுப்பைக் குறிக்கிற அல்லது அதில் நிகழ்கிற.

homotype : ஒத்த உறுப்பு : உடனொத்த அமைப்புடைய உறுப்பு.

homozygote : இரட்டைப் பிறப்பில் ஒரே இணைவு : கரு முட்டை ஒத்த இரு பாலணுக்களாகப் பிரிந்து கருவுறுதல்.

homozygous : ஓவிய.

homunculus : குள்ளன்.

honey combing : தேனடைப் பின்னல் : சிற்றிடைவெளி சார்ந்த நுரையீரல் நோயின் இறுதி நிலைகள். இதில் கடும் வலைப் பின்னல்கள், 5 மி.மீ விட்டத்துக்கு அதிகமாகக் காற்று இடைவெளிகளைச் சூழ்ந்து கொண்டிருக்கும்.

honeymoon cystitis : தேனிலவு சிறுநீர்ப்பை அழற்சி : பெண்களுக்குச் சிறுநீர்க் குழாயில் ஏற்படும் கோளாறு. இது புணர்ச்சியுடன் தொடர்புடையது.

hookworm : கொக்கிப்புழு : நோய் உண்டாக்கும் கொக்கிப் புழு, கொக்கிப் புழு நோய் அல்லது சுரங்கத் தொழிலாளர் குருதிச் சோகை உண்டாக்கும் வட்டப்புழு ஒட்டுண்ணி.

hooping-cough : குத்திருமல்; கக்குவான் இருமல்.

Hoover's sign : ஹூவர் குறியீடு : நுரையீரல் உறையழற்சி அல்லது ஈரல் உறைக் கசிவு காரணமாக மார்பின் ஒரு பக்கத்தின் அசைவில் உண்டாகும் ஒரு