பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

house dust

538

human immu...


house dust : வீட்டுத் தூசு : வீடுகளில் காற்றில் சேகரமாகும் கலவைத் தூசு வீட்டுத் தூசியில் நுண்ணிய பூச்சிகள் முக்கியமாகக் கலந்திருக்கின்றன. இதனால் சிலருக்கும் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படுகின்றன.

house-surgeon : மனை மருத்துவர் : மருத்துவமனையிலேயே தங்கி யிருந்து மருத்துவப் பணியாற்றும் மருத்துவர்.

HRCT : எச் ஆர் சி டி (HRCT): உயர் சுழற்சிக்கணிப்பு ஊடுகதிர் உள் தளப்பட (High Resolution Computed Tomography) என்பதன் சுருக்கம்.

HSV : எச் எஸ் வி : படர்தாமரை என்னும் தோல் நோயை (தேமல்) உண்டாக்கும் நோய்க் கிருமி.

HTLV : எச்டிஎல்வி (HTLV) : மனித T உயிரணு வெள்ளணுப் புற்றுக் கிருமி (Human T-cell leukaemia / lymphoma virus) என்பதன் சுருக்கம்.

huckle : இடுப்பு; இடைபிட்டம்.

huckle-back : கூன்.

huckle-backed : கூன் முதுகுள்ள.

huckle-bone : இடுப்பெலும்பு.

human : மனிதர்; மாந்தர்; மனித மாந்த.

human chorionic gonadotrophin (HCG) : நச்சுக் கொடி இயக்குநீர் : நச்சுக் கொடியிலிருந்து சுரக்கும் இயக்குநீர், சில சமயம் பெண் மலடு நீக்கக் கொடுக்கப்படுகிறது.

human growth hormone : மனித வளர்ச்சி இயக்கு நீர் : முன்புறக் கபச்சுரப்பியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு வேதியியல் முன்னோடிப் பொருள். இது உடல் இயல்பாக வளர்ச்சியடைவதைத் தூண்டுகிறது.

human immunodeficiency virus (HIV) : மனித நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்க் கிருமி (HIV) : RNA என்ற மரபணு உயிர்மம் கொண்டுள்ளநலிவுறுத்தும் நோய்கிருமியின் மெதுவாகச் செயற்படும் ஒரு உட்குடும்பம். இந்த நோய்க் கிருமிச் செரிமானப் பொருள், மறுதலை படியெடுப்பினைச் செய்கிறது. இது தாய் உயிரணுவில் நோய்க் கிருமி ஊடுருவதைத் தொடர்ந்து, RNA மரபணு உயிர்மத்தின் DNA படியெடுக்கும் குணமுடையது இந்த DNA படியானது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊடுருவிச் சென்று தாய் உயிரணுவுடன் ஒருங்கிணைகிறது. இது புதிய RNA படிகளை எடுப்பதற்கு ஒரு மென்தகடாகப் பயன்படுகிறது. இந்த HIV நோய்க் கிருமிகள், HIV-1, HIV-2 என்று இருவகையாக உள்ளன. HIV நோய்க் கிருமி CD4+ ஹெல்ப்பர் T என்ற சிறிய குருதி வெள்ளணுக்களைத் தாக்கி, CD4+ உயிரணுக்களுடன் உராய்ந்து,