பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hygraphen

545

hyperactivity


hygraphen : ஹைக்ராஃபென் : தலைமுடி சார்ந்த கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்தின் வணிகப்பெயர்.

hygroma : கழுத்து நீர்க்கட்டி; நீர்மக் கட்டி : பிறவிலேயே கழுத்தில் அமைந்திருக்கும் நீர்மம் அடங்கிய வீங்கிய கட்டி.

hygrometer : ஈரமானி : ஈரநிலையை அளவிடும் கருவி.

hygrometry : ஈரக்கணிப்பு : ஈர நிலையை அளவிடும் கணிப்பு.

hydroscope : ஈரங்காட்டி : காற்று மண்டலத்தில் ஈரநிலை காண உதவும் கருவி.

hygroscopic : ஈரம் உறிஞ்சி; நீர்ம உறிஞ்சி; ஈரமீர்க்கும்; ஈரம் ஏற்பி : காற்று மண்டலத்திலுள்ள ஈரத்தை எளிதாக உறிஞ்சுகிற பொருள். எடுத்துக்காட்டு கிளிசரின்.

Hygroton : ஹைக்ரோட்டோன் : குளோரோத்தாலிடான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

hymen : கன்னிமைத் திரைச் சவ்வு : கன்னிச் சவ்வு முதிரா இளமைப் பருவத்தில் பெண்குறியின் புற வாயை முடியுள்ள தாள் போன்ற சவ்வு.

hymen, imperforate : அறாச் சவ்வு.

hymenectomy : கன்னிச் சவ்வு; அறுவை மருத்துவம் : கன்னிமைத் திரைச் சவ்வினை அறுவை மருத்துவம் மூலம் கீறி விடுதல்.

hymenology : சவ்வு ஆய்வியல் : உடலின் சவ்வு மண்டல ஆய்வு தொடர்பான அறிவியல் பிரிவு.

Hymenoptera : சவ்வு இறகுப் பூச்சிகள் : நன்கு வளர்ச்சியடைந்த சவ்வு இறகுகள் இரண்டு இணைகள் கொண்ட பூச்சிகளின் தொகுதி. இதில் எறும்புகள், தேனிக்கள், குளவிகள் ஆகியவை இதில் அடங்கும்.

hyoid : நாவடி எலும்பு; கவை எலும்பு : நாக்கின் வேர்ப்பகுதியில் உள்ள "U" வடிவில் வளைந்த எலும்பு.

hyoid leone : நாவடி எலும்பு.

hyoscine : நச்சு செடிக்காரம் : நச்சுச் செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன் படும் ஒரு காரப் பொருள்.

hyperacidity : மீமிகு அமிலத் தன்மை; அமில மிகைப்பு; மிகை அமிலச் சுரப்பு; அமிலப் பெருக்கம் : அளவுக்கு மீறிய அமிலத் தன்மை இரைப்பையில் அமிலம் அளவுக்கு மீறி உற்பத்தியாதல். இது முன் சிறு குடல் புண், அசீரணம் ஆகியவற்றில் உண்டாகும்.

hyperactivity : மிகை இயக்கம் : படபடத்துக் கொண்டிருத்தல், வலுச்சண்டைக்குப் போதல்,