பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyperaemia

hypercapniae


கேடு விளைவித்தல் போன்ற அதீத நடவடிக்கையில் ஈடுபடுதல்.

hyperaemia : மீமிகு குருதிப் பாய்வு; குருதித் திரட்சி; மிகைக் குருதி; குருதிப் பெருக்கம் : உடலின் ஒருபகுதியில் அளவுக்கு மீறி குருதி பாய்தல்.

hyperaesthesia : மட்டற்ற கூருணர்வு நிலை; அதியுணர்வு : அள வுக்க மீறிய கூர் நரம்புணர்ச்சிக் கோளாறு.

hyperalgesia : மட்டற்ற வலியுணர்வு; மிகைத்த வலியுணர்வு; அதிவலி; வலி மிகை : வலியை அளவுக்கு மீறி உணரும் திறனுடனிருத்தல்.

hyperalimentation : மட்டற்ற ஊட்டம் : அளவுக்கு மீறி உணவு ஊட்டி வளர்த்தல்.

hyperaoidity : அமிலப் பெருக்கம்.

hyperaemia : குருதிப் பெருக்கம்.

hyperaesthesia : அதிதொடுகை.

hyperbaric : மிகை அடர்த்தி : 1. ஒன்றுக்கு அதிகமான வாயு மண்டல அழுத்தத்தைக் குறிப்பது. 2. நீர்த்த அல்லது நடுத்தரக் கரைசலை விட அதிக அடர்த்தியான கரைசல்.

hyperbaric oxygen treatment : அதிஅழுத்த ஆக்சிஜன் மருத்துவம் : கார்பன் மானாக்சைடு வாயு நச்சினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழுத்தமூட்டிய ஆக்சிஜன் அடங்கிய ஒரு நீர் உருளைக்குள் செலுத்திச் சுவாசம் சீராக நடைபெறுவதற்குச் செய்யப்படும் மருத்துவம்.

hyperbarism : மிகை அழுத்தக் கோளாறு : ஒன்றுக்கு அதிகமான வாயு மண்டல அழுத்தம் காரணமாக உடலில் உண்டாகும் சீர்குலைவு,

hyperbilirubinaemia : மட்டற்ற பிலிரூபின் : இரத்தத்தில் அளவுக்கு மீறி பிலிருபின் இருத்தல். இதன் அளவு 100 மீ.லிட்டருக்கு 1-1-5மி. கிராம் அளவைவிட அதிகமாக இருக்குமாயின் அது மஞ்சள் காமாலை நோய் இருப்பதைக் குறிக்கும்.

hypercalcaemia : மட்டற்ற கால்சியம்; அதிகால்சியக் குருதி : குரு தியில் அளவுக்குமீறி கால்சியம் இருத்தல். இதனால், பசியின்மை, அடிவயிற்றில் வலி, தசைவலி, உடல் நலிவு உண்டாகிறது.

hypercalciuria : மட்டுமீறிய சிறுநீர் கால்சியம்; அதிகால்சிய நீரிழிவு: சிறுநீரில் அளவுக்கு மீறி கால்சியம் இருத்தல், இது எலும்பு கால்சிய கசிவின் காரணமாக ஏற்படுகிறது.

hypercapnia : குருதியில் மட்டற்ற கார்பன் டையாக்சைடு; அதிகரியம் :தமனி இரத்தத்தில் கார்பன் டையாக்சைடு (CO2) அளவுக்கு மீறி அதிகமாக இருத்தல்.