பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypercatabolism

547

hypereosinophil syn...


hypercatabolism : மட்டற்ற உயிர்ப் பொருள் சிதைபாடு : உடலினுள் சிக்கலான பொருள்கள் அளவுக்கு மீறிச் சிதைந்து எளிய பொருள்களாக மாறுதல்.

hypercellularity : மிகை உயிரணுப் பெருக்கம் : எலும்பு மச்சை போன்ற உடலின் எந்தப் பகுதி யிலுமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு மீறி அதிகரித்தல்.

hyperchloraemia : மட்டற்ற குளோரைடு குருதி; மிகை குளோரோடு அயனிப் பெருக்கம் : இரத்தத்தில் அளவுக்கு மீறி குளோரைடு இருத்தல். சுற்றோட்டமாகச் செல்லும் குருதியில் குளோரைடு அயனிகளின் அள்வு கணிசமாக அதிகரித்தல்.

hyperchlorhydria : மட்டற்ற ஹைடிரோகுளோரிக் அமிலம்; அமில மிகைப்பு : இரைப்பை நீரில் அளவுக்கு அதிகமாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருத்தல்.

hypercholesterolaemia : கொழுவிய மிகை.

hyperchromatism : மிகைக் கருமைய மாசு : 1. அளவுக்கு மீறிய நிறமியாக்கம். 2. உயிரணு கரு மையத்தில் குரோமாட்டின் அதிகமாக இருத்தல், 3. கரு மையத்தின் அளவுக்கு மீறிய மாசு.

hypercortism : மிகஅண்ணீரக இயக்குநீர் : உடம்பில் அண்ணீரகப் புறணி இயக்கு நீர் அதிகமாக உற்பத்தியாதல்.

hypercupraemia : மிகைக்குருதிச் செம்பு : குருதியில் அளவுக்கு மீறி செம்பு இருத்தல்.

hypercythaemia : மிகைக்குருதிச் சிவப்பீனு : சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருத்தல்.

hypercytosis : மிகைக்குருதி உயிரணு : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியில் அல்லது திசுக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருத்தல்.

hyperdynamia : தசை மிகை இயக்கம் : தசையின் மிகை இயக்கத்தைக் காட்டும் நோய்.

hyper electrolytaemia : நீர் வெளியேற்றம் : நிணநீர் அடங்கிய சோடியம் மற்றும் குளோரைடு அளவு அதிகமாகி, நீர் மிகுதியாக வெளியேறுதல்.

hyperemesis : மிகை வாந்தி; அதி வாந்தி : கருவுற்ற பெண்கள் அளவுக்கு அதிகமாக வாந்தி எடுத்தல்.

hyperemesis gravidarum : கடும் மசக்கை.

hypereosinophis syndrome : மிகைச் சிவப்பூதா உயிரணு நோய் :