பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acidity

54

aciduric


acidity : அமிலத்தன்மை : காடித் தன்மை புளிப்புத்தன்மை. அமிலத்தன்மையின் அளவு pH அளவுகளில் அளவிடப்படுகிறது. pH 6.69 என்பது மிகவும் வலுக்குறைந்த அமிலத்தைக் குறிக்கும். pH1 என்பது ஒரு வலுவான அமிலத்தைக் குறிக்கும்.

acidimeter : காடிமானி : காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி.

acidogenic : அமில ஊக்கி.

acidophil : அமிலமேற்பி : (1) அமில நிறம் ஏற்பி. (2) முன் மூளையடிச் சுரப்பியின் அணுக்கள் அமில நிற ஏற்பிகளாக உள்ளன. (3) அமிலமேற்பி நுண்ணுயுரி: அமில ஊடகத்தில் நன்கு வளரும் தன்மையுள்ள ஒரு நுண்ணுயிரி.

acidophilic : (1) அமில நிறமேற்பி : அமிலத்தை ஏற்றுக்கொள்ளும் பண்புகள். (2) அமிலப் பண்புள்ள சாயத்தை ஏற்றுக் கொள்ளும் ஒர் அணுவகை

acidophylic cells : அமில நிற ஏற்பணுக்கள்.

acidosis : அமிலவேற்றம்; அமிலத்தேக்கம்; குருதி அமிலப் பெருக்கம், அமில மிகை : இரத்தத்தில் காரப் பொருள் குறைந்து, அளவுக்கு மேல் அமிலப்பொருள் (காடிப் பொருள்) இருத்தல். இதனால் இரத்தத்தில் அமில உப்பு மூலச் சமநிலை சீர்கெடுகிறது.

acid phosphatase : ஆசிட் பாஸ்பட்டேஸ்; அமில பாஸ்பட்டேஸ் : pH அளவு 5.4-இல் பாஸ்பாரிக் எஸ்டரிலிருந்து கனிமப் பாஸ்பேட்டை வெளி யிடும் நொதி. இது ஆண்மைச் சுரப்பியில் காணப்படுகிறது.

acid phosphatase test : அமில ஃபாஸ்ஃபேட்டேஸ் சோதனை : கார்போஹைட்ரேட்டுகளின் ஒர் அமில ஊடகத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இந்தப் பொருளின் அளவு இரத்தத்தில் அதிகரிக்குமானால் அது ஆண்பால் உறுப்புப் பெருஞ் சுரப்பியில் புற்றுநோய் உண்டாகி இருப்பதை குறிக்கும்.

acid poisoning : அமில விஷம்; அமில நச்சு : நச்சு அமிலத்தை அருந்துதல், இரைப்பையில் இருந்து ஹைட்ரோகுளோரிக் அமிலம் மேலெழும்பி வந்து உணவுக் குழாயைப் புண்ணாக்குதல்.

acidstain : அமிலக்கறை.

acidum : அமிலம்.

aciduria : அமிலச் சிறுநீர் : அமிலம் கலந்த சிறுநீர் வெளியேறுதல். மன வளர்ச்சி குன்றியிருப்பதற்கு இது ஒரு காரணம் என்று அண்மை ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

aciduric : அமில ஊடக வளர்ச்சி : அமில ஊடகத்தில் வளரும் தன்மையுள்ள.