பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyperinolution

549

hypermetropia


விட்டுவிட்டு அல்லது தொடர்ச்சியாக, வலிப்புடனோ, வலிப்பு இல்லாமலோ மயக்கம் உண்டாதல்.

hyperinolution : மிகை உட்சுருள்வு : மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பை இயல்பு அளவுக்குக் குறைவாக உட்கருளாக இருத்தல்.

hyperkalaemia : மிகைப்பொட்டாசியம் : குருதியில் அளவுக்கு மிகுதியாகப் பொட்டாசியம் இருத்தல். இதனால் குமட்டல், வயிற்றுப்போக்கு, தசை நலிவு உண்டாகும்.

hyperkeratosis : மிகைப் பொருமல் : மிகை ஊட்டத்தினால் ஏற்படும் உறுப்புப் பொருமல்.

hyperkinesis : மிகை இயக்கம்; அதிசலனம்.

hyperkinetic syndrome : மிகை இயக்க நோய் : பெரும்பாலும் 2-4 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இந்நோய் கண்ட குழந்தைகளுக்கு மன வளர்ச்சி மெதுவாக நடைபெறும். அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் ஏற்படும். அச்சமின்மையும், எந்தத் தண்டனையும் அஞ்சாத போக்கும் காணப்படும்.

hyperlipidaemia : உடல் திசுக்கொழுப்பு மிகைப்பு : சுற்றோட்டமாகச் செல்லும் கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடிகள், கொலஸ்டிரால் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருத்தல். இது மரபணு நோய், சீரணநோய் போன்ற சிக்கலான எதிரெதிர் விளைவுகளை உண்டாக்குகிறது.

hyperlipaemia : மிகைக்கொழுப்பு : இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு இருத்தல்.

hyperlithuria : மிகையூரிக் அமிலச் சுரப்பு : சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகச் கரத்தல்.

hyperlysinaemia : தன் இனக்கீற்றுக் குறைவு நோய் : குழந்தைப் பருவத்தில் ஏற்படும் தன் இனக் கீற்றுக் குறைவுநிலை. இதில் லைசின் அல்லது அதன் வளர்சிதை வினைமாற்றப் பொருள்கள் அதிகமாக இருக்கும்.

hypermagnesoemia : மிகை மக்னீசியம் : குருதியில் அளவுக்கு மீறி மக்னீசியம் இருத்தல். இதனால் சிறுநீரகச்செயலிழப்பு உண்டாகும். அதிக அளவு மக்னீசியம் அடங்கிய வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தினை உட் கொள்வதாலும் இது உண்டாகும்.

hypermetabolism : மிகை வளர் சிதைமாற்றம் : உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் உண்டாதல்.

hypermetropia : தொலைப் பார்வைக் கேளாறு; தூரப்பார்வை : கண்தவறான இடத்தில் அமைந் திருப்பதால் ஏற்படும் கோளாறு. இதனால், ஒளிக்கதிர்கள், விழித்