பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypermobility

hyperplasia


திரையின் மேல் விழுவதற்குப் பதிலாக, அதற்கு அப்பால் விழுகின்றன.

hypermobility : மிகை அசைவு; அதியசைவு : அளவுக்கு மீறி இயக்கத் தன்மையுடனிருத்தல்.

hypermorph : மிகை உறுப்பு நீட்சி : நீண்ட கைகால்கள் உடைய ஒர் ஆள். இதனால், இவருடைய நிற்கும் உயரம், உட்கார்ந்திருக்கும் உயரத்தை விட அதிகமாக இருக்கும்.

hypernatraemia : மிகை சோடியம்; குருதி உப்பு மிகைப்பு : அளவுக்கு மீறி நீர்வெளியேறுவதால் இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சோடியம் இருத்தல்.

hypernephroma : சிறுநீரகச் சுரப்பிப்புற்று : சிறுநீரகச் சுரப்பிப் புற்றுநோய். வலியில்லாமல், இடைவிட்டு சிறுநீர்க்குருதி ஏராளமாகப் போகும்.

hyperonychia : மிகை நகம்;அதி நகம் : நகங்கள் அளவுக்கு அதிகமாக வளர்தல்.

hyperorthocytosis : மிகைவெள்ளணு : பல்வேறு வகை உயிர் அணுக்கள் இயல்பான வீதத்தில் இருக்கும்போது, குருதி வெள்ளணுக்கள் மிக அதிகமாக இருத்தல்.

hyperosmolar diabetic coma : மிகை நீரிழிவு மயக்கம் : குருதியில் மிக உயர்ந்த அளவுக்கு சர்க்கரை அதிகரிப்பதால் உண்டாகும் இயல்பு கடந்த, எல்லா உணர்ச்சிகளும் இழந்த முழு மயக்கநிலை.

hyperoxaluria : மிகை கால்சியம் ஆக்சாலூரியா : சிறுநீரில் அளவுக்கு மிகுதியாகக் கால்சியம் ஆக்சாலேட் இருத்தல்.

hyperperistalsis : மிகைத் தசைச் சுருக்கம்; அதியளவு : உணவு சாரம் எளிதில் செல்வதற்கு இசைவான தானியங்கிக் குடல் தசைகளின் சுருக்கு அலைகள் மிகுதியாக இருத்தல்.

hyperphagia : பெருந்தீனி அதியுணவு : அளவுக்கு அதிகமாக உண்ணுதல்.

hyperphosphataemia : மிகை ஃபாஸ்ஃபேட் குருதி : இரத்தத்தில் ஃபாஸ்ஃபேட்டுகள் மிகுதியாக இருத்தல்.

hyperpigmentation : மிகை நிறமியாக்கம்; அதி நிறமேற்றம் : நிறமியாக்கம் அளவுக்கு அதிகமாக நடைபெறுதல்.

hyperpituitarism : அரக்க வளர்ச்சி : உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் மூளையடிச் சுரப்பியில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து அரக்க உருவம் உண்டாதல்.

hyperplasia : மிகையணுவளர்ச்சி; அதி பெருக்கம் :உயிர்