பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyperplasmia

551

hypertonia


திசுவணுக்கள் அளவுக்கு அதிகமாக உருவாதல்.

hyperplasmia : மிகை உயிரணுப் பெருக்கம் : உயிரணுக்களின் எண்ணிக்கை மட்டுமீறிய எண்ணிக்கையில் இருத்தல். இதனால் ஒர் உறுப்பின் வடிவளவு அதிகரித்துவிடும்.

hyperploidy : மிகை இனக்கீற்று : இனக்கீற்றுகள் இயல்பான எண்ணிக்கையை விட ஒன்று அல்லது இரண்டு அதிகமாக இருக்கும் நிலை.

hypernoea : மூச்சுத் திணறல் : விரைவான ஆழ்ந்த சுவாசம்; மூச்சுத் திணறல்.

hyperproteosis : மிகைப் புரதம் : சீருணவில் புரதத்தின் அளவு அளவுக்கு அதிகமாவதால் ஏற்படும் நிலை.

hyperpyrexia : மிகைக் காய்ச்சல்; கடுங்காய்ச்சல்; கடுஞ்சுரம் : உடல் வெப்பநிலை 40-41°C-க்கு அதிகமாக இருத்தல்.

hypesecretion : மிகைச் சுரப்பு : உடலில் சுரப்புநீர் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.

hypersensitivity : ஒவ்வாமை; மிகைஉணர்வு கூறுணர்வு : ஒரு துண்டுதல் அல்லது ஊறு பொருள் காரணமாக அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவயப் படுதல்.

hypersplenism : மிகை மண்ணீரல் சுரப்பு : மண்ணீரலில் அளவுக்கு அதிமாகச் சுரப்பு ஏற்படுதல். இது மண்ணீரல் வீக்கம் காரணமாக ஏற்படுகிறது.

hypertalorism : மிகை மண்டைத் திரிபு; அதி விலகு புருவம் : மன வளர்ச்சிக் குறைபாடு காரணமாக உண்டாகும் மண்டையோடு சார்ந்த திரிபுக்கோளாறு (தாழ்ந்த நெற்றி, கூரிய உச்சித் தலை).

hypertension : மிகைக் குருதி அழுத்தம்; பேரழுத்தம்; குருதி உயர் அழுத்தம்; மிகை இரத்த அழுத்தம் : மிக மட்டுமீறி உயர்ந்த இரத்த அழுத்தம். இது மூளை இயக்கம் மற்றும் பல சுரப்பு சார்ந்த காரணங்களால் உண்டாகிறது.

hyperthermia : மிகை வெப்பநிலை; அதிவெப்பநிலை : ஒரு புற்றுக்கட்டியை வெப்பத்தின் மூலம் கரைப்பதற்கு உடலில் உண்டாக்கப்படும் மிக அதிக அளவு வெப்பநிலை.

hyperthyroidism : மிகைக் கேடயச் சுரப்பி நோய்; கேடயமிகை : கேடயச் சுரப்பியில் (தைராய்டு) சுரப்புநீர் மிக அதிகமாக சுரப்பதால் உண்டாகும் நோய்.

hypertonia : மிகைத் தசைத்திண்மை; அதி விறைப்பு : தசைக்