பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ΙΜΑ

567

imipenem


ΙΜΑ : ஐ.எம்.ஏ : இந்திய மருத்துவச் சங்கம் (Indian Medical Association) என்பதன் சுருக்கம்.

image : தோற்றம்; மனக்காட்சி; உள உரு; வடிவமைவு; படிவம்; வடிவமைபு : மனதில் உருவம் கற்பித்துக் காணுதல்.

imagery : நினைவுக்காட்சி; மனக் காட்சி : மனத்தகத் தோற்றம்: புனைவாற்றல் கற்பனை.

imagination : கற்பனை : பொருள்கள், ஆட்கள் அல்லது நிலைமைகள் ஆகியவற்றின் முன்பு அறியப்பட்ட உருவக் காட்சிகளிலிருந்து வேறுபட்ட மன உருக்காட்சிகள்.

imaging : உருக்காட்சியகம் : உடம்புக்குள் உள்ள கட்டமைவுகளின் உருக்காட்சிகள், படங்கள் அல்லது நிழல்களை உருவாக்குதல். காந்தப் புலங்கள், ஒலி அலைகள், கதிரியக்கம் ஆகயவற்றைப் பயன்படுத்தி இவ்வாறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் கணினிகள் மூலம் ஒருங்கிணைத்து இது செய்யப்படுகிறது.

imago : முழுநிறைவு நிலை : 1. பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்த பிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறைவான நிலை, 2. கற்பனை குறிக்கோள் கவிந்திருக்கும் குழந்தைப் பருவத்தில் உருவாகும் ஒரு நினைவாற்றல்.

imbalance : சமநிலையின்மை; சமனின்மை; சீரின்மை : இரண்டுக்குமிடையே சமநிலை இல்லாதிருத்தல், தசை அல்லது சுரப்பி ஒருங்கிணைப்பு பிறழ்பட்டிருத்தல்.

imbecile : பிறவி மூளைத் தளர்ச்சி; மூளை நலிவு : பிறவியிலேயே மூளைத் தளர்ச்சியுடன் இருத்தல்; மனவளர்ச்சிக் குறைபாடு.

imbecility : மூளைத்தளர்ச்சி; மூளை நலிவுறல் : மனவளர்ச்சி குன்றிய நிலை, மனக்கோளாறு.

imbedding : பதிவாக்கம் : சுற்றியுள்ள திசுவுடன் பொருத்தி வைத்தல். கருப்பையின் உள் வரிச்சவ்வுடன் இணைந்த மனிதக் கரு ஊன்மங்களைப் பதியம் செய்தல்.

imbibition : உள்ளீர்ப்பு : ஒரு திரவத்தை ஈர்த்துக் கொள்ளுதல்.

imferon : இம்ஃபெரோன் : அயன் டெக்ஸ்ட்ரான் தொகுப்பின் வணிகப் பெயர். அயச்சத்துக் குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்து.

imipemem : இமிப்பெனம் : சிறுநீரகச் செரிமானப் பொருளினால்