பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

imipramine

568

immunocompromised


ஒரளவு செயலிழக்கப்பட்ட ஆக்சிஜன் உள்ள, ஆக்சிஜன் இல்லாத, கிராம் எதிர்படி, கிராம் நேர்படி உயிரிகள். இதனால் இது அந்தச் செரிமானப் பொருளின் சைலாஸ்டாட்டின் என்ற தனிப்பிகளுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

imipramine : இமிப்பிராமின் : மனச்சோர்வினைப் போக்கக் கொடுக்கப்படும் மருந்து.

imitation : பிரதிபலிப்பு; போலமை; பின்பற்று.

immature : முதிராநிலை; முதிரா : முழுமையாக வளர்ச்சியடையாத நிலை.

immedicable : தீராத நோய் : குணப்படுத்த முடியாத (நோய்).

immersion : உள்தோய்வு : உடலை நீருக்கடியில் அல்லது வேறு திரவத்தினடியில் வைத்தல்.

immigration : இடம் பெயர்தல்.

immobilization : அசைவிலாமை.

immovable : அசைவுறா.

immune : நோய்த்தடை : தற்காப்பு மூலங்கள் பெருக்கமடைவதால் ஏற்படும் நோய் எதிர்ப்புத் திறன்.

immune reaction response : ஏம மறுவினை விளைவு : உடலில் பொருத்தப்படும் மாற்று உறுப்பினை உடல் ஏற்றுக் கொள்ள மறுத்தல்.

immunity : தடைக்காப்பு; தடைக் காப்பு நிலை; நோய் எதிர்ப்புச் சக்தி; ஏமம் : உடலில் புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து நோய் உண்டாவதைத் தடுக்கும் தடைக்காப்பு நிலை

immunization : ஏமளிப்பு; தொற்றுத்தடை; ஏமளித்தல் : தொற்று நோய்களிலிருந்து தடை காப்பு அளித்தல்.

immunoadsorbent : ஏமக்காப்பு உறிஞ்சுறு பொருள் : ஒரு கரை சலிலிருந்து காப்பு மூலங்களை உறிஞ்சிக் கொள்வதற்காக அல்லது துய்மைப் படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் கூழ் அல்லது செயலற்ற திடப் பொருள் போன்ற பொருள் எதுவும்.

immunoassay : ஏமக்காப்பு மதிப்பீடு : ஒருவரின் குருதியில் அல்லது திசுவிலுள்ள தற்காப்பு மூலங்களையும் காப்பு மூலங்களையும் அளவிடுவதற்கான ஆய்வுக் கூட முறைகள். இது தொற்று நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது.

immunocompetence : ஏமக்காப்புத் திறம்பாடு : ஏமக்காப்புத் துலங்கலை வளர்த்துக் கொள்வதற்கான உடலின் திறன்.

immunocompromised : ஏமக்காப்பு இன்மை : இயல்பான நோய்த்தடை அமைப்பு இல்லாதிருக்கும் நிலை.