பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inarticulate

573

incipient


கணிசமாகக் குறைதல், உடல் பலவீனமடைதல்.

inarticulate : இணைப்பு இன்மை : இணைக்கப்படாத நிலை, இணைப்புறுப்புகள் இல்லாத நிலை பேச முடியாத நிலை; கோர்வையாக பேச இயலாத நிலை.

inassimilable : செரிக்க முடியாத; அகக்துறிஞ்சாத : செரிமானம் செய்து கொள்ள இயலாதிருக்கிற.

inaudible : செவிப்புலன் இன்மை : கேட்க முடியாதிருத்தல்.

inborn : கருவில் உருவான; உட் பிறந்த : கருவிலிருக்கும் போதே உருவான பண்பு இயல்பாக அமைந்த அல்லது உள்ளார்ந்த இயல்பு.

inbreathe : மூச்சு உள்வாங்கல்.

inbreeding : குருதியுறவு மண முறை; உறவு இணைவு : மிக நெருங்கிய உறவினர்களிடையிலான திருமண உறவு.

INC : ஐ.என்.சி : இந்தியச் செவிலியர் பேரவை (Indian Nursing Council)

incarcerated hernia : அடைப்பட்ட குடலிறக்கம் : குடலின் ஒரு வளையம் மார்புப் பையினுள் பிதுங்கியிருத்தல். இதனை அறுவைச் சிகிச்சையின்றி பழைய நிலைக்குக் கொண்டு வர இயலாது.

incept : வாங்கல்; சினை உள்ளடக்கல்.

inception : தொடக்கம் : 1. தொடக்க நிலை 2. உணவை வயிற்றுக்குள் கொண்டு செல்லுதல். 3. அகத் தாய்வு.

incest : முறை தகாப் புணர்ச்சி; கூடா பாலறவு; கூடாக்கலவி : தடை விதிக்கப்பட்ட அணுக்க உறவினரிடையிலான கலவி. எடுத்துக்காட்ட தந்தை மகளுக்கிடையில், தாய் மகனுக்கிடையில் புணர்ச்சி தடை செய்யப் பட்டதாகும்.

incidence : நிகழ்வு; நிகழ்தகவு; நிகர் வளவு : ஒரு கால அளவின் போது ஒரு நிகழ்வு அல்லது நிலை நிகழும் எண்ணிக்கை; ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது பொதுவாக ஒராண்டில் ஒரு நோய் புதிதாகத் தோன்று நேர்வுகளின் எண்ணிக்கை.

incidentaloma : தற்செயல் கட்டி : உருக்காட்சி நடைமுறைகள் அல்லது பிற முறைகளில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்ட கட்டித் திரட்சி.

incineration : நீறாக்கல்.

incinerator : நீற்றுலை : திடக்கழிவுப் பொருள்களை எரிப்பதற்கான நீர் உலை.

incipient : தொடக்க;ஆரம்ப.