பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

incised wond

574

incubation


incised wond : வெட்டுக்காயம் : கூரிய கத்தி போன்ற ஆயுதங் களால் வெட்டிய காயம்.

incision : வெட்டுதல் (கீறுதல்); கிழித்தல்; கீறல் : கூர்மையான கருவியினால் உடல் திசுவில் வெட்டுதல்.

incisor : உளிப்பல்; வெட்டுப் பல் : முன் வாய்ப்பல், உணவை அரைத்து உண்ணப் பயன்படுகிறது.

incitant : தூண்டு பொருள் : ஒரு வினையை, நோயை அல்லது நிகழ்வைத் தூண்டி விடுகிற பொருள்.

inclusion : சேர்ப்பு.

inclusion bodies : உள் துகள்கள் : நோய்க் குணத் திசுக்கள், இயல் பான திசுக்களின் சில உயிரணுக்களில் காணப்படும் நுண்ணிய துகள்கள்.

incoherence : தொடர்பின்றிப் பேசுதல் : ஒன்றுக் கொன்று தொடர்பில்லாமல் பேசுதல்.

incoherent : தொடர்பற்ற : தருக்க முறையில் தொடர்பில்லாத, புரிந்து கொள்ள முடியாத அசைவில்லாத.

incompatability : ஒற்றாமை.

incombatibility : ஒவ்வாமை; பொருந்தாமை; ஒன்றாமை : இரத்த தானமளிக்கப்பட்ட இரத்தத்தை நோயாளிக்குச் செலுத்தும் போது அந்த இரத்தம் ஒத்திசையாமல் போதல்.

incompatible : முரண்பட்ட; ஒன்றா : மாறுபாடான, உடலியல் முறையில் ஒன்றுக்கொன்று முரண்பாடாகச் செயற்படும் உடலியல் பொருள்கள், உடலியல் முறையில் ஒன்றுக்கொன்று மாறுபட்டுச் செயல் புரியும் மருந்து.

incompetence : திறைமைக் குறை; தகுதியற்ற; உடல் இயலாமை; தகாமை : சில இயல்பான பணிகளைச் செய்திட இயலாதிருத்தல் எ-டு நெஞ்சுப் பைச் சவ்வடைப்பு இயங்காதிருத்தல்.

incongruity : முரண்மை.

incontinence : தன்னடக்க மின்மை; கட்டுப்பாடிழந்த; அடக்காமை ஒழுகை : சிறுநீர்கழித்தல் போன்ற இயற்கை முனைப்புகளை அடக்க இயலாதிருத்தல்.

incoordination : இணக்கமின்மை; தசை ஒத்தியங்காமை; இணை; ஒழுங்கின்மை; ஒருங்கிணையாமை : தசை இயக்கங்களை ஒரு முகப்படுத்த இயலாதிருத்தல்.

incubation : அடைகாப்பு; அடைவுக் காலம்; அடைநிலை : நோய் குறி தோன்றும் முன்பு நோய்க்