பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

incubation period

575

incus


கிருமிகள் பெருக்கமடையும் கால அளவு.

incubation period : அடைக்காலம்; நோய்க்கிருமி பெருக்க காலம் : உடலில் பாக்டீரியா நுழைவதற்கும் நோய்க்கிருமிகள் தோன்றுவதற்குமிடையிலான காலம்.

incubator: கரு முதிர்ச்சிக் கருவி; சீர் வெப்பப் பெட்டி; அடைக் காப்பு : 1. முழுவளர்ச்சியுறாமல் உரிய காலத்திற்கு முன்னரே பிறந்த குழந்தைகளை வளர்க்கும் கருவி. 2. மருத்துவ முறைகளுக்கான நோய்க்கிருமிப் பெருக்க அமைவு.

incudectomy : காதெலும்பு அறுவை மருத்துவம் : காதெலும்பின் பகுதிகள் அனைத்தையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

incudostapedial : காதெலும்பு சார்ந்த : காதின் மையப் பகுதியிலுள்ள காதெலும்பு, அங்கவடி, செவிச்சிற்றெலும்பு சாாநத.

incurable : குணமாகாத; தீர்விலி; தீராத :குணப்படுத்த முடியாத.

incus : காதெலும்பு : சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்குங்கும் காது எலும்பு.