பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acquoshumor

57

acrocephalo syndactyly


acquoshumor : செவிக்குழல் நீர்மம்.

acral : புறமுனை : உடலின் புற முனைப் பகுதிகள் தொடர்புள்ள.

acrarthritis : அங்க எலும்பு அழற்சி.

acratia : வலுவிழத்தல்.

acrid : நெடி; கார்ப்பு : கசப்பு, உறுத்தல், எரிச்சல் உள்ள நெடி.

acriflavine : அக்ரிஃபிளேவின் : ஆற்றல் வாய்ந்த நோய் நுண்ம அல்லது நச்சுத்தடைப் பொருள். இது காயங்களுக்கு 1 : 1000 கரைசலாகவும் 1 : 8000 வரையிலான கரைசலாகவும் பயன் படுத்தப்படுகிறது. அக்ரிஃ பிளேவின் பால்மம், மென்மையான, ஒட்டிக் கொள்ளாத காயங்களுக்குக் கட்டுப் போடக் கூடிய ஒரு மருந்து. இதில் திரவகன்மெழுகு (பாரஃபின்) அடங்கியுள்ளது. புரோஃபிளேவின், யூஃபிளேவின் இரண்டும் ஒரேமாதிரியான கூட்டுப் பொருள்கள்.

acrimony : உறுத்தல் நெடியுள்ள.

acrisia : நோய் மூலம் அறியாமை.

acritical : மோசமான நிலையற்ற, நெருக்கடியற்ற இக் கட்டான நிலையற்ற இக்கட்டுநிலை இல்லாத.

acritochromacy : நிறப்பார்வைப் பிறழ்வு.

acroagnosis : காலில்லா உணர்வு; உறுப்பில்லா உணர்வு : கால் இல்லாத உணர்வு.

acroanaesthesia : உறுப்பு முனை உணர்விழப்பு : ஒரு காலில் அல்லது இரண்டு கால்களில் உணர்ச்சிக் குறைவு.

acroarthritis: உறுப்பு மூட்டழற்சி.

acrobystitis : குறி முனைத் தோலழற்சி.

acrocentric : கை கால் நீள வேறுபாடு.

acrocephalia : கூம்புத் தலை : இது பிறவியிலேயே அமையும் பொருத்தமில்லா உருவக்கேடு. இதில், அம்புத்தலை வடிவ மற்றும் தலை ஒட்டின் மூலம் முகட்டெலும்பையும் பின் முகட்டெலும்பையும் இணைக்கும் பொருத்து வாயானது முதிர்வதற்கு முன்பே மூடிக்கொள்வதன் காரணமாகத் தலையின் உச்சி கூம்பாகவும், கண்கள் வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும்.

acrocephalo syndactyly : கூம்புத்தலை வாத்து விரல் : இது பிறவியிலேயே அமையும் ஒர் உருவக்கேடு. இதில், தலையின் உச்சி கூம்பு வடிவிலும், கை விரல்களும் பாதவிரல்களும் வாத்தின் கால் லிரல்களைப் போன்று இடைத் தோலினால் ஒன்றுபட்டிணைந்தும் இருக்கும்