பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

infective

580

informed consent


infective : தொற்றவைக்கும் இயல்புடைய; தொற்றும் பண்பு : தொற்றுநோயை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தொற்றச் செய்யும் இயல்புடைய.

inferior : கீழார்ந்த.

inferential statistics : ஊகிப்புப் புள்ளியியல் : மாதிரிகளின் அடிப் படையில் நிகழ்தகவுகள் குறித்து பொதுவான முடிவுகளை எடுப்பதற்குப் பயன்படும் முறைகள்.

inferior : தாழ்ந்த; கீழ்.

inferiority complex : தாழ்வு மனப்பான்மை : தனக்குப் பாது காப்பில்லை என ஒருவருக்கு ஏற்படும் உணர்வு. இதனால் சிலர் மூர்க்கத்தனமாக நடக்கக் கூடும்.

infertitle : மலட்டிய.

infertility : மலட்டுத் தன்மை; கருத்தறிக்காமை; மலடு : இனப் பெருக்கம் செய்யும் திறன் இல்லாதிருத்தல். இந்நிலை கணவனிடமோ மனைவியிடமோ இருக்கலாம்.

infestation : ஒட்டுண்ணி மொய்ப்பு; பீடித்தல்; மொய்ப்பு : மனித உடம்பில் விலங்கு ஒட்டுண்ணிகள் நிறைந்திருத்தல்.

infibulation : விழைச்சுக் கட்டு : புணர்ச்சி செய்வதைத் தடுக்கும் பொருட்டுப் பாலுறுப்புகளைக் கொக்கியினால் கட்டிவிடும் முறை.

infiltration : ஊடுபரவல்; ஊடுருவல்; உட்பரவல் : சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல். வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படியாக உட்சென்று பரவுதல்.

infirm : வலிமை இழப்பு : முதுமை காரணமாக உடல் வலிமை குறைந்து, திறனற்ற நிலையடைதல்.

infirmary : மருத்துவமனை; நோய்மனை.

inflammation : அழற்சி (வீக்கம்): காயம் காரணமாக உயிர் வாழும் திசுக்களில் உண்டாகும் எரிச்சல், வீக்கம், அழற்சி போன்ற விளைவுகள்.

inflation : உப்பல் : காற்று, வாயு அல்லது திரவம் காரணமாக ஒர் உறுப்பு ஊதுதல் அல்லது வீங்குதல்.

influenza : சளிக்காய்ச்சல்; புளுக் காய்ச்சல்; பினுசுரம் : கடுநீர்க் கோப்புடன் கூடிய காய்ச்சல், இது கொள்ளை நோயாகப் பரவக் கூடியது.

influenza cold : கடும் நீர்க்கோப்பு.

informed consent : அறிந்த பின் இசைவு : அறுவைச் சிகிச்சை