பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inhibitor

582

innutritious


அல்லது பயிற்சி காரணமாகச் செயல் வேட்கைகளின் உள்ளார்ந்த தடையுணர்ச்சி.

inhibitor : தடைப்பி.

inion : பின் உச்சிப் புடைப்பு : வெளிப்புற பின் மண்டை எலும்பு சார்ந்த புடைப்பு அல்லது வீக்கம்

injection : ஊசி மருந்து ஊசிபோடுதல்; உட்செலுத்துதல்; ஊசி குத்தல் : திசுக்களில் ஊசியிட்டு மருந்து செலுத்துதல் ஊசி வழி மருந்தேற்றல்.

injection, intramuscular : தசை ஊசி.

injection, inrtavenous : நரம்பு ஊசி; குருதி ஊசி.

injector : ஊசிக் கருவி. திரவத்தை அதிக அளவில் பாய்ச்சும் ஒரு சாதனம்.

injury : காயம்.

injury, simple : வெறும் காயம்.

injury, grievous : கடும் காயம்.

inlay : உட்பதிவுப் பொருள் : ஒரு பல்லின் உட்குழிவின் துல்லியமான வடிவத்தில் வைத்து நிரப்பிப்பூகம் திடப்பொருள்.

inlet : உள்வழி.

inlet, pelive : இடுப்பு உள்வழி.

innate : உள்ளியல்பான : உள்ளார்ந்த மரபணுவியல் சார்ந்த இயல்பு.

innervate : நரம்பு வலிவாக்கல்.

innervation : நரம்பு வலுவூட்டுதல்; நரம்பூட்டம்; நரம்பளிப்பு; நரம்பிடல் : ஒர் உறுப்பின் நரம் பூட்டம்.

innocent : தீங்கற்ற; தீமையற்ற; சாதுவான : நோய் வகையில் கடு மையிராத.

innocuous : கேடற்ற; தீங்கிலா; தீதற்ற; தீங்குவிளையா : தீங்கு விளைவிக்காத

innominate : இடுப்பெலும்பு : வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பெலும்பு.

innominate : பெயரற்ற; பெயரிலா : பெயரிடப்படாத அநாமதேய.

innominate bone : பெயரிடப்படா இடுப்பு எலும்பு : வயது வந்தவரி டையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பெலும்பு.

innutrition : உணவு ஊட்டக்குறை.

innutritious : சத்துக் குறைவான; ஊட்டம் தராத.