பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inoculate

583

insensible


inoculate : தடுப்பூசி போடுதல் : தொற்று நோய்களைத் தடுக்க அந்த நோய் அனுக்களைக் கொண்ட மருந்தின்னை ஊசிமூலம் உடலுக்குள் செலுத்துதல்.

inoculation : நோய்த்தடுப்பு ஊசி; தடுப்பூசி : தொற்று நோய்களைத் தடுக்க பாதுகாப்பு வினையை ஊக்குவிக்க அந்நோயனுக்களைக் கொண்ட மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்துதல்.

inoculum : ஊசி மருந்து : ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படும் ஒரு பொருள்.

inoperable : அறுவையிலா.

inorganic : கரியமற்ற கனிம; அல்கரிம : கணிப்பொருள் தோற்ற முடைய.

inositol nicotinate : இனோசிட்டோல் நிக்கோட்னேட் : குருதி நாள விரிவகற்சி மருந்தாகப் பயன் படுத்தப்படும் நிக்கோட்டினேட்.

inpatient : அகநிலை நோயாளி : மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் செய்து கொள்பவர்.

inquest : சடல ஆய்வு; இறப் பாய்வு : திடீரென அல்லது எதிர்பாராமல் நடந்த மரணத்தின் போது உடலைப் பரிசோதனை செய்தல்.

insane : மூளை குழம்பிய; பித்து பிடித்த.

insane asylum : மனநல மருத்துவ மனை; மனநல மருத்துவக் காப்பகம்.

insanitary : துப்புரவற்ற.

insanity : பித்து நிலை; மனக் கேடு; பித்து : மூளை திறம்பிய பித்துப் பிடித்த நிலை, தன்னிலை மறந்த பைத்திய நிலை.

inscription : மருந்துக் குறிப்பு : மருந்துகளின் பெயர்களைக் குறிப்பிடும் மருத்துவ மருந்துக் குறிப்பு.

insect : பூச்சி : ஈ, தேனி, பேன், உண்ணி, சிலந்தி, குளவி, மலை குளவி போன்ற பூச்சி வகை.

insect, borne : பூச்சித் தொற்று.

insecticide : பூச்சிக் கொல்லி மருந்து : புழுபூச்சிகளை அழிப் பதற்கான மருந்து.

insemination : கருவூட்டல்; விந்தேற்றல்; விந்துட்டம்; விந்தளிப்பு; விந்திடல் : பொதுவாகப் பாலுறவு மூலம் கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்.

insemination, artificial : செயற்கை விந்தளிப்பு.

insensible : உணர்ச்சியற்ற; புலப்படா; உணரா : உணர்விழந்து காழ்த்துப் போன.