பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

insufin

585

insulin resistance


insulin : கணையச் சுரப்பு நீர்; தீவியம் : கணையத்தில் சுரக்கும் நீர்ப்பொருள். இது தசைகள். இரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்து, அதை உடைத்து எரியாற்றலாக மாற்ற உதவுகிறது. நீரிழிவு நோய் உடையவர் களிடம் இந்தப் பொருள் சுரப்பதில்லை. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது. எனவே, விலங்குகளின் கணையச் சுரப்பிலிருந்து எடுக்கப் பட்ட கணையச் சுரப்பு நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

insulin-dependent diabetes mellitus (IDDM) : இன்சுலின் சார்பு நீரிழிவு நோய் : குழந்தை பருவத்தில் ஊசி மூலம் இன்சுலின் மருந்து வழக்கமாகச் செலுத்தப்பட வேண்டிய நீரிழிவு நோய்.

insulin kinase : இன்சுலின் கைனேஸ் இன்சுலினுக்கு வினையூக்க மளிக்கிற ஒரு செரிமானப் பொருள்.

insulin lipodystrophy : இன்சுலின் கொழுப்பு இழுப்பு : அடிக்கடி இன்சுலின் ஊசி போடுவதனால் ஏற்படும் சிக்கல் காரணமாக நீரிழிவு நோயாளிகளிடம் உள் எல்லைக் கொழுப்புப் படிவுகள் இழப்பு.

insulin preparations : இன்சுலின் தயாரிப்புகள் : விரைவாகச் செயற் படும் நடுத்தரமாகச் செயற்படும் என்பிஎச் ஐசோஃபேன், நீண்ட காலம் செயற்படக் கூடிய (புரோட்டோ மின் துத்தநாக இன்சுலின்-PZI) போன்ற இன்சுலின் தயாரிப்புகள். தூய்மையாக்கிய போர்சின், ஆக்டிராப்பிட், இன்சலாட்டார்ட், மிக்ஸ்டார்ட் ஆகியவை மனித இன்சுலின்.

insulin pump : இன்சுலின் இறைப்பான் : தாழ்ந்த நிலைகளின் ஒழுங்கான வீதத்தில் இன்சுலின் வழங்கும், உள்ளே பொருத்தக் கூடிய சாதனம்.

insulin-regulatable glucose transporter (GRT) : இன்சுலின் சார்ந்த குளுக்கோஸ் அனுப்பீட்டுச் சாதனம் : இன்சுலின் தூண்டுதல் காரணமாக திசுப்பாய்மச் சவ்விலிருந்து குருதிநீர்ச் சவ்வுக்கு இடம் பெயக்கிற தசையிலுள்ள ஒரு புரதம் மற்றும் கொழுப்பு, இதனால் உயிரணுக்குள் குளுக்கோஸ் பாய்வது அதிகரிக்கிறது.

insulin resistance : இன்சுலின் எதிர்ப்பு : இன்சுலின் உடலியல் அளவுக்கான உகந்த அளவுத் துலங்கலை வெளிப்படுத்தும் நிலை. இது சுற்றோட்டமாகச்