பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

insulin shock

586

intelligence


செல்லும் குளுக்கோகான் அல்லது இன்சுலின் ஏற்பிப் பற்றாக்குறை காரணமாக ஏற்படலாம்.

insulin shock : இன்சுலின் அதிர்ச்சி : இன்சுலினை அளவுக்கு மிகுதியாகச் செலுத்துவதால் இயல்பான மூளைச் செயற்பாட்டுக்குத் தேவையானதை விட மிகுதியாகக் குருதிக் குளுக்கோஸ் குறைபாடு ஏற்படுதல்.

insulin tolerance test : இன்சுலின் தாங்குதிறன் சோதனை : இன்சு லினைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உடலின் திறனை அறிவதற்கான சோதனை, குருதியிலுள்ள குளுக்கோஸ் அளவு இன்சுலின் செலுத்தி அவ்வப்போது அளவிடப்படுகிறது. குருதி குளுக்கோஸ் அளவு 30 நிமிடத்தில் குறைந்து, 90 நிமிடத்துக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பு கிறது. கால்சியம் குறைபாடுள்ள நோயாளிகளிடம் களுக்கோஸ் குறையும் அளவு குறைவாகவும் இயல்பு நிலைக்குத் திரும்பும் நேரம் குறைவாகவும் இருக்கும்.

insulinoma : மிகை இன்சுலின் சுரப்பு : இன்சுலினை அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் லாங்கர் ஹான்ஸ் தீவுகளின் பீட்டா உயிரணுக்களில் ஏற்படும் கட்டி இதனால், குருதியில் குளுக்கோஸ் அளவு கணிசமாகக் குறைந்து மயக்கநிலை ஏற்படும்.

insulitis : இன்சுலின் ஊடுருவல் : நீரிழிவு வகையில் கணையத் தீவுகளில் ஒற்றைக் கருமைய உயிரணுக்கள் ஊடுருவுதல்.

insult : இகழ்ச்சி : முன்னரே சீராக்கப்பட்ட நிலையின் பின் னணியில் ஏற்படும் நோய் நிலையில் அழுத்த விசையுடன் கூடிய தூண்டுதல்

intake : உள்வாங்குதல்; ஏற்பு : உணவு, திரவம் ஆகியவை உட் கொள்ளப்படுதல்

integrated : ஒருங்கிணைப்பு.

integration : ஒருங்கிணைப்பு : ஒருங்கிசைந்து செயற்படுவதற்காக பல்வேறு உறுப்புகளை அல்லது செயல்முறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்தல்.

integrin : இன்ட்டெக்ரின் : ஆக்சி பெர்ட்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

integument : புறவுறை மேந்தோல்; புறவரி : தோலின் புறப்போர்வை.

Intellect : அறிவு; அறிவான்மை : பகுத்தறிவுத் திறன் சிந்திக்கும் ஆற்றல.

intelligence : அறிவுத் திறன்; மதிநுட்பம்; அறிவுத் திறம்; நுண்ணறிவு: