பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intumescence

invertebrate


intumescence : வீக்கம்; புடைப்பு.

intussusception : குடல் செருகல்; குடலுள் மடிப்பு; குடலேற்றம் : குடலின் ஒரு பகுதி இன்னொரு பகுதிக்குள் செருகிக் கொண்டிருக்கும் நிலை. இதனால் குடலிலும், வயிற்றிலும் கடும் அடைப்பு ஏற்படும். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பால்குடி மறக்கும் வேளையில் ஏற்படும்.

imulase : இனுலேஸ் : இனுலின் என்ற கார்போஹைடிரேட்டை லெவுலோஸ் பழச்சர்க்கரைப் பொருளாக மாற்றும் ஒரு செரி மானப்பொருள்.

inulin : இனுலின் : டி-ஃபிரக்டோஸ் என்ற பழச்சர்க்கரைப் பொருளின் தாவர ஹேர்மோ பாலிசர்க்கரைடு. இது சிறுநீரக துப்புரவினை அளவிடப் பயன் படுத்தப்படுகிறது.

inunction : நெய்யாட்டு; எண்ணெய் தேய்த்தல்; நீவல்; தடவுகை : தோலில் எண்ணெய் தடவுதல்.

in utero : கருப்பையுள்.

in vacuo : உள் குழிவு சார்ந்த : காற்று அகற்றப்பட்ட உட்குழிவினுள் உள்ள.

invagination : உறையிடுதல்; உள்முக மடிப்பு உள்ளுறையீடு; உட்குழிவு : குழாய் போன்ற உறையை அகம்புறமாகத் திருப்புதல்.

invalid : நோயாளி; முடம் படுதல்.

invalidism : நோய்மை.

invasion : வல்லந்த நுழைவு; பற்றுதல்; தாக்கம் : உடலுக்குள் நோய்க்கிருமிகள் வல்லந்தமாக நுழைதல்'

invasive : வல்லந்த நுழைவு : 1. உடல் திசுக்களில் ஒரு கருவி யைச் செருகுவதற்கான மருத்துவ நடைமுறை. 2. ஒரு புற்று தோன்றிய இடத்துக்கு அப்பால் பரவுவதற்கான போக்கு.

invasiveness : வல்லந்தப்பரவல் : வல்லந்தமாக நுழைந்து, பரவும் நிலை.

inversion : தலைகீழ்த் திருப்புதல்; உள் திருப்பல்; கவிழ்த்தல் : கருப்பையைத் தலைகீழாகப் புரட்டுதல் போன்ற தலைகீழ்த்திருப்பம்.

inversion of the uterus : கருப்பை உட்திருப்பம்.

invert : உள் திருப்பு.

invertase : சர்க்கரைப் பகுப்பான் : குடல் நீரிலுள்ள சர்க்கரையை பிரிக்கும் செரிமானப் பொருள்.

invertebrate : முதுகெலும்பில்லா : முதுகெலும்பில்லாத விலங்கு இனங்கள்.