பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

involute

596

iridocele


எதிர் அயனி நேர் துருவத்தினுள்ளும் இடம் பெயரும்.

involute : இயல்பு மீட்சி : விரிவாக்கத்துக்குப் பிறகு இயல்பு நிலைக்கு மீள்தல்.

IOP : ஐ.ஒ.பி. : உள்கண்விழி அழுத்தத்தின் (Intraocular pressure) சுருக்கம்.

iopanic acid : அயோப்பானிக் அமிலம் : ஊடுகதிர் ஒளிபுகாத சாயம். பித்தப்பை ஊடுகதிர்ப் படத்தில் இது பயன்படுத்தப் படுகிறது.

iopanic acid : அயோப்பானிக் அமிலம் : புட்யிரிக் அமிலத்திலிருந்து வழிப்பொருளாக எடுக்கப்படும் சிக்கலான அயோடின்.

IP : ஐ.பி. : நோய் முதிர்வுக் காலம் (Incubation period) என்பதன் சுருக்கம்.

ipecae : ஐப்பிக்கா : வாந்தியும் வயிற்றுப் போக்கும் உண்டாக்கும் 'இப்பிகாகுவான்ஹா' என்ற தென் அமெரிக்க மூலிகைச்செடியின் உலர்ந்த வேர்.

IPPB : ஐ.பி.பி.பி. : இடையிட்ட நேரழுத்தச் சுவாசம் (Intermittent positive pressure breathing) என்பதன் சுருக்கம்.

IPPv : ஐ.பி.பி.வி. : இடையிட்ட நேரழுத்த காற்றோட்டம் (Intermittent positive pressure ventiation) என்பதன் சுருக்கம்.


ipsilateral : ஒருபக்க அமைவு : ஒரே பக்கத்தில் அமைந்துள்ள .

IQ : அறிவுத்திற அளவெண்; அறிவுத்திறன் குறியீடு : அறிவுக் குறிவிழுக்காடு எண்.

iridectomy : விழித் திரைப்படல அறுவை மருத்துவம்; திரையெடுப்பு; விழித்திரை நீக்கம் : விழித் திரைப்படலத்தின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல்.

iridectasis : விழிவிரிவாக்கம் : விழித்திரைப்படலத்தை அல்லது கண்ணின் மணியை விரிவடையச் செய்தல்.

iridectome : விழித்திரை அறுவைக் கருவி : விழித்திரைப்படல அறுவைச் சிகிச்சையில் விழித்திரையை வெட்டியெடுப்பதற்கான கருவி.

iridium : இரிடியம் (உறுதியம்) : அணு எண் 11 கொண்ட உறுதி மிக்க உலோகத் தனிமம். மார்புப்புற்றுநோயைத் தொடக்கத்தில் குணப்படுத்தப் பயன்படுகிறது.

iridocele : விழித்திரைப் பிதுக்கம் : விழித்திரைப்படலத்தின் ஒரு பகுதி பிதுங்கியிருத்தல்.

iridocyclitis : விழித்திரை வீக்கம்; திரைச் சூழலற்சி; திரை குவித்