பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iridodialysis

597

irrigation


தசையழற்சி : விழித்திரைப்படலம் வீங்கியிருத்தல்.

iridodialysis : விழித்திரைப் பிரிப்பு : விழித்திரைப் படலத்தைக் கண்ணிமை இணைப்பிலிருந்து தனியாகப் பிரித்தல்.

iridokeratitis : விழிவெண்படல வீக்கம் : விழித்திரைப்படலமும் விழிவெண்படலமும் வீக்கமடைதல்.

iridotomy : விழித்திரைக் கீறல்; திரை வெட்டு :' விழித்திரைப் படலத்தின் கீறல் செய்தல்.

iridoblegia : விழித்திரை வாதம் : விழித்திரைப்படலம் செயலற்றுப் போதல்.

iris : விழித்திரைப்படலம்; விழித்திரை : நடுவில் விழிமணிக்குரிய துளையுடைய ஒரு விழிச் சவ்வு.

iritis : விழித்திரை அழற்சி; திரை அழற்சி.

iron : அயம்/இரும்பு : குருதி நிறமி, செரிமானப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாத கனிமப்பொருள். அயம், அதன் உப்புகளின் வடிவத்திலும், அய சல்ஃபேட், அயரெக்ஸ்டிரான் போன்ற கூட்டுப்பொருள்கள் வடிவிலும் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு இறைச்சி, ஈரல்,முட்டை, மஞ்சள் கரு, கீரை வகைகள், உலர் கனிகள், வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சக்தி மிகுதியாக உள்ளது.

irongluconate : அயக்குளுக்கோனேட் : இரும்பின் கரிம உப்புகளில் ஒன்று. எரிச்சலைக் குறைக்கக் கூடியது.

iron chelators : அயம் நீக்கிகள்.

ironlung : அயலீரல்.

irradiate : அயனிக் கதிரியக்க மருத்துவம்; கதிர் ஊட்டயம் : அயனியாக்கக் கதிரியக்கத்துக்கு உட்படுத்திச் கிசிச்சை செய்தல்.

irradiation : அயனிக் கதிர் வீச்சு; கதிர் ஊட்டம் : 1. அயனியாக்கக் கதிரியக்கம் மூலம் சிகிச்சை அளித்தல். 2 மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் பரவச் செய்தல்.

irational : அறிவுக்குப் பொருந்தாத : பகுத்தறிவுக்குப் பொருந்தாத.

irreducible : குறுக்க இயலாத; குறையா; உள்ளொடுங்கா : விரும் பிய நிலைக்குக் கொண்டுவர முடியாதிருத்தல்.

irregularity : ஒழுங்கற்ற; சீரிலா.

irregularity of pulse : நாடிச் சீரின்மை.

irrigation : நீர்மக் குறை; மண்ணியம்.